உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்; அமைச்சர் வேலு தகவல்

திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்; அமைச்சர் வேலு தகவல்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமைச்சர் எ.வ. வேலு கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி; 2000 பேர் ஓராண்டுக்கு திருவண்ணாமலையில் ஏறும் நிலை இருந்தது. இது வரைக்கும் பெய்யாத ஒரு பெரிய மழை, 1965ம் ஆண்டுக்கு பின்னர் பெய்துள்ளது. அதன் பின்னர் 1972ம் ஆண்டு இப்போது பெய்த மழையில் பாதியளவு பெய்துள்ளது. அக்னி மலையான திருவண்ணாமலையே குளிர்ந்துவிட்டதால் தான் இன்றைக்கு ஒரு பெரிய பாறையே வீட்டின் மீது விழும் சூழல் எழுந்தது. மலை மீது 2000 பேர் ஏறினால் சரியாக இருக்குமா என்ற நிலையில் தான் முதல்வர் 8 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். அவர்கள் அங்குள்ள மண்ணின் நிலை, எத்தனை பேர் போகலாம் என்று அறிக்கை கொடுத்த பின்னர், அதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். தீபத்தன்று 11,500 பேர் வரை அனுமதிக்கலாம் என ஆணையாளர் கூறி உள்ளார். ஆன்லைன் மூலமாக 500 டிக்கெட்டுகள் பரணி தீபம் அன்று அனுமதிக்கப்படும். மகாதீபம் அன்று 1,500 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் அனுமதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 11,500 பேர் தீபத்தன்றும், மகா தீப நாளில் 6,600 பேரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறை கூடுதல் கவுண்ட்டர்கள் அதிகமாக அமைக்க இருப்பதால் யாரும் நீண்ட நேரம் காக்க வேண்டிய நிலை இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Edwin Jebaraj T ,Tenkasi
டிச 07, 2024 14:38

ஒரு தூண் கூட இல்லாமல் ஆத்தோடு போன 16 கோடி பாலம் அமைச்சரா, ஒரு பக்கம் மணல் கொள்ளை மற்றொரு புறம் திட்டம் என்ற பெயரில் வாரி சுருட்டுவது. இப்படி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யப் போறேன் என்று லட்சம் கோடிகள் கடன் வாங்கி வாங்கி தங்களது கஜானாவை நிரப்பும் கொள்ளைக்காரர்கள். மனது கனக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை