உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ. மாவட்ட நிர்வாகி கொலையாளிகள் மீது கைது நடவடிக்கை அவசியம்; அண்ணாமலை வலியுறுத்தல்

பா.ஜ. மாவட்ட நிர்வாகி கொலையாளிகள் மீது கைது நடவடிக்கை அவசியம்; அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பா.ஜ., மாவட்ட நிர்வாகி படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; வேலூர் மாவட்ட பா.ஜ., ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், கடந்த 16.12.2024 அன்று, தி.மு.க., ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பா.ஜ.,வினர் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில், தி.மு.க., ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது. இதிலிருந்து, விட்டல்குமார் படுகொலையில், தி.மு.க., நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. தி.மு.க.,வோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக, விட்டல் குமார் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் தி.மு.க.,வே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 20:31

அண்ணா மல லேகியம் தான் விக்கறார் என்று ஒத்துக்கொண்டார் duruvasar. கொஞ்சம் புத்தி வந்துடுத்து. லேகியம் விக்கறார், ஆனா யாரும் வாங்கலை ங்கறது duru க்கு தெரியல, பாவம்.


ghee
டிச 20, 2024 23:15

அந்த 200 ரூபாய் கூட்டத்திலே முதல் ஆள் நீ தானே...


ghee
டிச 20, 2024 23:17

என்ன கண்றாவி இது வைகுண்டம்...படித்த gst officer???


Chandrasekar Mahalingam
டிச 20, 2024 20:28

கட்சிகாரனுக்காக மட்டும் குரல் கொடுப்பவன் அரசியல் கட்சியின் வட்ட செயலாளர். தாங்கள் மாநில தலைவராச்சே!! மாநில மற்றும் தேசிய விஷயங்களுக்காக எல்லாம் பேச மாட்டேளா? இப்படியே விகன்டாவாதமாக மட்டுமே பேசின்டு இருந்தேல் மனைசால் உங்களை ஒதுக்கிடுவாள்.


நிக்கோல்தாம்சன்
டிச 20, 2024 20:06

நீங்க என்ன காட்டுக்கத்தல் கத்தினாலும் அவ்ளோதான்


karmic
டிச 20, 2024 19:46

BJP is nit good for Tamilnadu and that too Annamalai is to the extreme that he can join with anyone to win the election, if you don't then use a formula. If you're not helping BJP they use central powers for this gain and he will oppose in a different way. Too manipulative selfish guy


Kudumi
டிச 20, 2024 19:40

தமிழ்நாடு அரசே மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது. நீர் இங்கே வந்து நல்ல ஆத்துறீர்


A P
டிச 20, 2024 18:12

தமிழகத்தை சீர் செய்ய முயல்கின்ற ஒரு திறமை சாலி நடப்பு ஆட்சியைப் பற்றி சொல்கிற செய்திகளில் கமெண்ட் என்கிற பெயரில் உளறிக்கொட்டுவதற்காகவே திருட்டுப் பணம் கொடுத்து நூற்றுக்கணக்கான 200ரூ பெயர்களை அப்பாயிண்ட் செய்துள்ளார்கள் போலும். அண்ணாமலையின் கேள்விக்கு பதில் சொல்லாத தெரியாமல், கருத்து சொல்கிறார்கள். தனது தந்தை வைத்த அருமையான பெயரைக் கூறாமல், வேறு பெயரில் ஒளிந்துகொண்டு பிதற்றுகிறார்கள்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 20, 2024 18:09

ஆன்மீக தலைவர் நா என்ன தலைவரே , சரி உன்க சொந்த காரர் வீடு எல்லாம் ரைட் உங்க பணம் தான் அங்கு இருக்கு என்கிறார்கள் , அன்று ஆருத்திரா இப்போ இதுவா


MADHAVAN
டிச 20, 2024 17:42

கட்சில இருக்குற பிஜேபி ரௌடிகளை அடக்கவேண்டும்


Barakat Ali
டிச 20, 2024 17:18

பெண் தாதா அஞ்சலைக்கும் சேர்த்து போராடுங்க தலைவரே ..... நீங்கள் பொறுப்பேற்ற பிறகுதானே அவரும் பாஜகவில் சேர்ந்தார் ????


Palanisamy Sekar
டிச 20, 2024 19:32

கோவையில் 58 பேரை கொன்ற கொலையாளிக்கு தியாகி பட்டம் கொடுக்கும் உங்களை விசாரிக்கணும்


visu
டிச 20, 2024 20:36

அப்ப நீங்க தூங்கிட்டீங்களா இப்ப வந்து பேசுறீங்க அந்த வழக்கில் எல்ல கட்சினரும் மாட்டியதாக ஞாபகம் இப்ப இந்த கொலையை கண்டுக்காம விட்டிடலாம்னு சொல்றீங்களா


Vijay
டிச 20, 2024 21:22

கும்பல் எல்லாம் கருத்து சொல்லுது


சம்பர
டிச 20, 2024 16:59

மத்திய அரசுமூலம் தமிழக அரச மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம்