உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 2019 ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவிக்கப்பட்டது.மேலுார் வழக்கறிஞர்ஸ்டாலின் 2020ல் தாக்கல் செய்த மனு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 2019 ல் குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் முறைகேடு தொடர்பாக கீழ்நிலை அலுவலர்கள், போலீசார், புரோக்கர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். சில உயரதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி முறைகேடு நடக்க வாய்ப்ப்பில்லை. அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. பாரபட்சமின்றி சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வாய்ப்பில்லை. டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முறைகேடு தொடர்பாக பதிவான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மதுரை ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.டி.என்.பி.எஸ்.சி., தரப்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம், 'இதுபோல் தாக்கலான ஒரு வழக்கு அடிப்படையில் 2021 டிச.,14 ல் இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது,' என்றார்.நீதிபதிகள், 'ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M S RAGHUNATHAN
ஜூலை 25, 2025 09:50

இப்பொழுது ஏன் நிறைய வழக்குகளை CBI க்கு அரசு மாற்றுகிறது . மாநில காவல் துறை விசாரணையில் காவல் துறையை தன் வசம் வைத்து இருக்கும் முதல்வருக்கே நம்பிக்கை இல்லையோ? Left, right, centre என்று மாற்றி மாற்றி விமர்சித்த திமுக பேச்சாளர்கள் ஏன் வாய் மூடி மௌனி ஆகி விட்டார்கள். அரசு வக்கீல் அரசுக்கு எதிராக செயல் படுகிறார்கள் என்று வாக்குவாதம்.செய்ய வேண்டியது. ஸ்டாலின் மீடியா இது பற்றி ஒரு விவாதம் கூட நடத்தவில்லை ஏன் ? எங்கே " வரும்படி" இல்லாமல் போய்விடுமோ என்று பயம்.


Padmasridharan
ஜூலை 25, 2025 07:53

அரசு வேலையாட்களென்றாலே ஊழல் அதிகாரிகள்தானா. . அரசு வேலையும் சம்பளமும் வேணும், PF வாங்குவதற்கு முன் மக்களிடம் அதிகார பிச்சையும் எடுக்கணும். தினமும் இவங்க மூஞ்சிய கண்ணாடியில பார்த்துப்பாங்களா


சமீபத்திய செய்தி