உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்: அடுத்த மாதம் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்: அடுத்த மாதம் அறிவிப்பு

சென்னை: “அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறினார். டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, கடந்த டிசம்பரில் வெளியிட்டது. அதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட ஏழு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இருந்தன. ஆனால், தேர்வுகளுக்கான விண்ணப்பம், தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து, இதுவரை ஆணையம் அறிவிக்கவில்லை.இதுபற்றி, டி.என்.பி. எஸ்.சி., தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று கூறுகையில், ''அரசு துறைகளின் காலிப்பணியிடங்கள் குறித்த விபரம், இந்த மாதத்துக்குள் பெறப்பட்டு, அடுத்த மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த ஆண்டு முதல் விடைத்தாள் பக்கத்தை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் மாற்றி உள்ளோம். எவ்வித முறைகேடும் நடக்காமல், உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ