உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு

அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்சிகள் இனி வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. கட்சிகளின் பிரசார கூட்டங்கள், பேரணி ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டு நெறிகளை வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் த.வெ.க. வழக்கு தொடர்ந்தது. கரூர் நெரிசல் சம்பவத்துக்கு பின் மேலும் சில வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த ஐகோர்ட், 10 நாட்களுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அடுத்த விசாரணை 11ம் தேதி நடக்கிறது. அதற்குள் விதிகளை வகுக்க சர்வகட்சி கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்தது. அமைச்சர்கள் நேரு, ரகுபதி, சுப்பிரமணியன், தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், பொறுப்பு டி.ஜி.பி. வெங்கடராமன் ஆகியோர், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கொ.ம.தே.க., நாம் தமிழர், தே.மு.தி.க. உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவசரகால வசதிகூட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், கூட்டம் நடத்தும் இடம், நேரம், வழித்தடம், மேடை உள்ளிட்ட கட்டுமானங்களின் உறுதி, பாதுகாப்பு, மருத்துவம், அவசர கால வசதிகள் ஆகியவை பற்றி விதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறுவது, சேதம் ஏற்படுத்துவது போன்றவை நடந்தால், அதை ஈடு செய்வதற்காக 1 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கட்சிகளிடம் வைப்புத்தொகை வசூலிக்கலாம் என அரசு தரப்பு பரிந்துரைத்தது. பெரும்பாலான கட்சிகள் அந்த பரிந்துரையை ஏற்கவில்லை. தங்கள் கருத்தை எழுத்து வடிவில் 10ம் தேதிக்குள் அனுப்புமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டில் மறுநாள் அரசு அறிக்கை தாக்கல் செய்யும். கூட்டம் முடிந்தபின், கட்சி பிரதிநிதிகள் கூறியதாவது: தி.மு.க. பாரதி: எந்த நிபந்தனை விதித்தாலும், அது அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் எடுத்துரைத்தோம். அ.தி.மு.க. ஜெயகுமார்: அனைத்து கட்சி கூட்டம் என்றால், முதல்வர் தலைமை வகிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், ஸ்டாலின் வரவில்லை. கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்றால் கோர்ட்டுக்கு தான் போக வேண்டும் என்ற நிலை உள்ளது. எந்த விதி வகுத்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்: 24 பக்க அறிக்கையை அரசு கொடுத்தது. ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக இருந்ததால், அதை நாங்கள் ஏற்கவில்லை. எந்த மாநிலத்திலும் இப்படி கட்டுப்பாடுகள் இல்லை. ஐகோர்ட் உத்தரவை ஏற்க இயலாது என, அரசு கூற வேண்டும். மீறி உத்தரவு போட்டால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும். கூட்டத்தில் பங்கேற்காத பா.ம.க. அன்புமணி: பொதுக்கூட்டம், பேரணி நடத்துவது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. டிபாசிட் கட்டாயமானால், ஆட்சியில் இருந்து கொள்ளையடித்த கட்சிகள் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த முடியும். இது, அரசியலை வணிகமயமாக்கி, ஜனநாயகத்துக்கே ஆபத்தாக முடியும். இவ்வாறு தலைவர்கள் கூறினர். 'அன்புமணிக்கு அழைப்பு விடுக்காதது பா.ம.க.வை அவமதிக்கும் செயல்' என, கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு பேட்டி அளித்தார். 'பா.ம.க. பெயரில் கலந்து கொண்ட முரளிசங்கர், கோபு ஆகியோருக்கும் பா.ம.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. இது எங்களை அவமதிக்கும் செயல்' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Madhavan Parthasarathy
நவ 07, 2025 09:10

அமெரிக்காவில் மண்டப கொள்ளவு நபர்களுக்கானது என்று 500 பேர்கள் போல பலகை வைப்பார்கள். கூட்டம் அதிகமானால் உள் இருப்போரை வெளியேற்றி புதுதாக வருபவர்களுக்கு இடம் கிடைக்கும். வாசல் கதவை இழுத்து மூடும் அதிகாரம் போலீசுக்கு உண்டு


Barakat Ali
நவ 07, 2025 08:32

ஆளும் திமுக விதிவிலக்கு ..... இல்லீங்களா???


Mani . V
நவ 07, 2025 05:37

இது ஆளும் மாடல் ஆட்சிக்குப் பொருந்தாதுதானே ஊழல் மந்திரிமாரே, ஊழல் அதிகாரிமாரே?


சிட்டுக்குருவி
நவ 07, 2025 04:10

பொது மக்களிடமும் கருத்துகேட்பு எழுத்துமூலமாக பெற்று ஆராய்ந்திடவேண்டும் .எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் 3 அல்லது 4 மணிக்குமேல் மக்கள் கூடவேண்டியிருந்தால் கட்டாயம் குடிநீர் ,கழிப்பிட ஏற்பாடுகள் அவசியமாக்கப்படவேண்டும். இது கூட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் .ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அல்ல .பொது இடங்களில் சாலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டாயம் அனுமதி கூடாது .முன்கூட்டியே இடங்களை ஆயுவுக்குட்படுத்தி மக்கள் கூடும் அளவை நிர்ணயம் செய்து அதற்க்கு தகுந்தாற்போலவே மக்களை கூட்ட இடத்திற்கு அனுமதிக்கவேண்டும் .இதை காவல் துறை நடைமுறை செய்யும் வழிமுறைகளை அரசு வகுக்கவேண்டும், இதை எல்லாக்காட்சிகளும் ஆமோதித்து நடைமுறைப்படுத்தவேண்டும் .இடத்தின் அளவுக்கு மீறி மக்கள் வருவார்கள் என்று கட்சிகள் நினைத்தால் அவர்கள் வேற்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பெரியளவிலான TVSCREN கள் பொருத்தி ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும் .கூட்டம்நடத்தும் கட்சிகள் கூட்டம் கூடுவதும் ,கலைந்துசெல்வதற்குமான தடுப்புவசதிகளை காவல்துறை வரைமுரைப்படி /அறிவுறுத்தல்படி கட்டாயம் செய்துகொள்ளவேண்டும் .கூட்டம் கூடும் இடங்களில் கட்டாயம் ஆம்புலன்ஸ்கள் கூட்டம் அளவிற்க்கேட்ப கட்சி ஏற்பாட்டுடன் தயார் நிலையில் நிறுத்திவைக்கவேண்டும். கூட்டம் நடத்தும் கட்சின் பாதுகாப்பு தொண்டர்கள் தேர்வுசெய்து ,காவல்துறைக்கு ஒத்துழைப்பை கொடுக்க அறிவுறுத்த வேண்டும்.காவல்துறை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் . .இத்தனையும் இந்த குழு ஆராயவேண்டும் .


Kasimani Baskaran
நவ 07, 2025 04:01

கோடிகளில் புரளும் தீம்க்கா போன்ற கட்சிகளுக்கு இதென்ன பிரச்சினையா? சிறிய காட்சிகளை இன்னும் சொல்லப்போனால் இவர்களால் எளிதில் பிரச்சினைக்கு உள்ளாக்க முடியும்.


தாமரை மலர்கிறது
நவ 07, 2025 01:19

கூட்டம் நடத்த பத்து கோடி ரூபாய் குறைந்தது தேவை என்று சொல்வதே நல்லது. ஏனனில் லெட்டர் பேடு கட்சிகள் போக்குவரத்தை எப்போதும் போராட்டம் என்று சொல்லி மறிக்கின்றன. பொருளாதாரம் முடங்குகிறது.


Ramesh Sargam
நவ 07, 2025 00:29

பேசாமல் கூட்டங்களை காணவருபவர்களிடம் கட்டணம் வசூலித்தால், ஒருவரும் வரமாட்டார்கள். மிஞ்சிப்போனால் ஒரு சில அல்லக்கைகள் வரும். அவ்வளவுதான். பிரச்சினை solved.


பிரேம்ஜி
நவ 07, 2025 07:08

சூப்பர் யோசனை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை