உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.560 குறைந்தது

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.560 குறைந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

கிராம் ரூ.6,400க்கு விற்பனை

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Narayanan
ஆக 06, 2024 13:09

முதல்வர் தமிழக பெண்களுக்கு வழங்கும் ருபாய் 1000 ல் ஒரு பவுன் வாங்கலாம் என்று சொல்லும் செய்தியே மகிழ்ச்சி


sundarsvpr
ஆக 06, 2024 10:51

நகை மோகம் எப்போதிலிருந்து உள்ளது என்று தெரியவில்லை . ராமாயண காலத்தில் இருந்துள்ளது. ராமன் மனைவி ஜானகி ஆபரணங்களை மொத்தமாய் சுருட்டி கிஷ்கிந்தா மலை பக்கம் போட்டதாக அறியமுடிகிறது. தற்போது ஆபரணங்கள் நிலம் வாங்க வீடு வாங்க கலயாணம் படிப்பு முதலியவற்றுக்கு உதவ படுகிறது. நகைகள் நம்முடைய வாழ்வுடன் இணைந்துள்ளது. இது ஒரு பக்கம். மற்றுப்பக்கம் நாஸ்திக அரசு கோயில் நகைகளை உருக்கி செய்திடும் விமர்சனத்திற்கு உரிய செய்கைகள். தங்க பஸ்பம் சாப்பிடுவர்கள் உண்டு. நாயன்மார்கள் ஆழ்வார்கள் தெய்வங்களின் ஆபரணமற்ற திருமேனியில் ஆழங்கால பட்டார்கள் என்பதனை மறக்கக்கூடாது.


P. VENKATESH RAJA
ஆக 06, 2024 10:07

தங்கம் வாங்கினால் நன்றாக இருக்கும்..காசு தான் இல்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை