உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரைக்காற்று பலமாக வீசும்; வானிலை மையம் தகவல்

தரைக்காற்று பலமாக வீசும்; வானிலை மையம் தகவல்

சென்னை: 'காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில பகுதிகளில் வலுவான தரைக்காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் செய்திக்குறிப்பு:

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது, கூடலுார், மேல் கூடலுார் - 3; நடுவட்டம், தேவாலா, கன்னியாகுமரி - 2; திருவண்ணாமலை - 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 27ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் இடி, மின்னலுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது.இதற்கிடையில், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், காற்றின் வேக மாறுபாட்டால், வலுவான தரைக்காற்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

malanguyasin
ஜூலை 23, 2024 09:08

தமிழ்நாடு வானிலை அறிக்கையை தூக்கி ஒடப்புல போடு மழை வரும்னா வெயில் அடிக்கும் கடமைக்கு வேலை பாக்க வேணாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை