உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தக்காளி காய்ச்சல் அதிகரிப்பு: குழந்தைகள் மீது கவனம் அவசியம்

தக்காளி காய்ச்சல் அதிகரிப்பு: குழந்தைகள் மீது கவனம் அவசியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; 'தோலில் சிவப்பு நிற அரிப்புடன் ஏற்படும் தக்காளி காய்ச்சல் பரவ துவங்கியிருப்பதால், எச்சரிக்கை அவசியம்' என, பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.தக்காளி காய்ச்சல், குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருகிறது. முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாளில் காய்ச்சலாகவும், பின் கை, கால் பாதங்களில் கொப்பளம் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.கோடைக் காலம் துவங்கி இருப்பதால், குழந்தைகள் இத்தகைய உபாதையால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று நோயாக இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:

இந்த காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி, வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம். தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில், ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். அதேநேரம், பாதிப்புக்கு ஏற்ப, சிகிச்சை பெறுவது அவசியம். இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும். எனவே, அறிகுறிகள் தெரிந்தால், உடனடி சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஏப் 05, 2025 07:17

மாநில அரசுக்கு இது பற்றி கவலை இல்லையா? சிலை வைப்பதில் நீட்டை நீக்குதல், டாஸ்மாக்கை விசாரிக்கக்கூடாது போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் ஒரு வேலை இது சிறிய பிரச்சினையோ என்னவோ..


sridhar
ஏப் 05, 2025 08:29

தக்காளி விற்பனையை ஸ்டாலின் தடை செய்துள்ளார் .


முக்கிய வீடியோ