உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளம்பெண்ணுக்கு டார்ச்சர்: திமுக எம்எல்ஏ மகன் மீது அண்ணாமலை புகார்

இளம்பெண்ணுக்கு டார்ச்சர்: திமுக எம்எல்ஏ மகன் மீது அண்ணாமலை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணை தாக்கி, சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.பல்லாவரம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி. இவரது மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sjxezfbx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட பதிவு: சென்னை பல்லாவரம் தொகுதி சட்டசபை எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

அப்புசாமி
ஜன 19, 2024 11:37

தமிழக போலீசை, நீதிமன்றத்தை கண்டிக்காமல்.பொல்ட்டிகல் ஸ்டேமெண்ட்டாக அடிச்சு உடறாரு.


g.s,rajan
ஜன 19, 2024 04:35

கருணாநிதியின் வாரிசுகள் எல்லாமே பெண்களுக்குத் தீராத தொல்லை கொடுக்கும் ரகத்தைச் சேர்ந்தவர்கள் தானே....


தமிழ்
ஜன 18, 2024 19:08

தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அப்படியே சசிகலா புஷ்பா அவர்களிடம் பொது வெளியில் சீண்டிய பிரமுகரிடமும் விசாரித்தால் நல்லது.


vns
ஜன 18, 2024 18:33

திராவிடம்


Nachiar
ஜன 18, 2024 18:32

சமத்துவம் கொடிக் கட்டி பறக்கிறது.


duruvasar
ஜன 18, 2024 18:10

மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுதல்படி விஷயத்திற்காக எம் ல் ஏவை எதிர்த்து போராடமுடியாமல் இருக்கிறது.


duruvasar
ஜன 18, 2024 18:05

அந்த எம் ல் எ பெயரை பார்த்தால் இந்த குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என நம்ப வாய்ப்பிருக்கிறது. போன வாரம் தான் இதே பெரியரில் இருந்த ஒரு நபர் டக்லஸ் வாட்ச் சொந்தக்காரர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


வாய்மையே வெல்லும்
ஜன 18, 2024 17:44

எல்லா மாடல் டூபாக்கூர்களும் நானூற்றி இருவது ரகம் போல இருக்குதே.. இவர்களை விட்டுவைத்தால் பேராபத்து தான் மிச்சம் தமிழக மக்களுக்கு..


Yes your honor
ஜன 18, 2024 16:03

இந்த கொடிய நிகழ்விற்கு எதிராக விசிக செயல்பாடு என்ன?


N.Purushothaman
ஜன 18, 2024 15:59

அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது ...நிச்சயம் கடும் நடவடிக்கை தேவை ....


Senthoora
ஜன 18, 2024 18:00

உபி, குஜராத், டெல்லியில் நடக்காதா?


sridhar
ஜன 18, 2024 18:50

ஐயையோ , டெல்லியில் உங்க ஆளு ஆட்சி. என்ன இப்படி உளறிட்டீங்க .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை