அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.வரும் 2026ல் நடக்க தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.வரும் அக்டோபர் 12ம் தேதி நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. மதுரையில் நடைபெறும் தொடக்க விழாவில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று, நயினார் நாகேந்திரனின் பிரசாரத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.அவர், கட்சி நிர்வாகிகள், அணி, பிரிவுகளின் நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதுடன், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.இந்நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதுடன், மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.பிரசாரத்திற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.