வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை மிக மிக அதிகமாக உள்ளது . தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து கட்டு படுத்த வேண்டும் . இனியும் அப்பாவி உயிர்கள் பலியாக கூடாது.
Long live dogs as human life has become secondary
ஓசூர்: ஓசூர் குப்பட்டி ஊராட்சி தின்னுரை சேர்ந்தவர் எட்வின் பிரியன், 23. எம்.பி.ஏ., பட்டதாரி. சில நாட்களுக்கு முன் இவரை நாய் கடித்துள்ளது. அதை அலட்சியமாக எடுத்துக் கொண்ட அவர் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளவில்லை. ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளான அவர் நேற்று உயிரிழந்தார். ஓசூர் குப்பட்டி ஊராட்சி தின்னுரை சேர்ந்தவர் எட்வின் பிரியன், 23. கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வின் பிரியனை நாய் ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் வீட்டில் உள்ள யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார் மேலும் நாய் கடிக்கு சிகிச்சை ஏதும் எடுத்து கொல்லாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w116scgk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நேற்று மதியம் திடீரென அவருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு எச்சில் துப்புவதும் சத்தம் போட்டு அலறியபடியும் இருந்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை கக்கதாசம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு இருந்ததால் தளி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.அப்போது அங்குள்ள மருத்துவர்கள் அவரை நாய் கடித்துள்ளது எனக்கூறி உள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு அவருக்கு நாய்க்கடி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.பின்னர் மேல் சிகிச்சைக்காக இரவு நேரத்தில் எட்வின் பிரியனை ஒரு அவரது உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின் அவர் சத்தம் போடுவதை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். ஆனால் சிறிது நேரத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை மிக மிக அதிகமாக உள்ளது . தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து கட்டு படுத்த வேண்டும் . இனியும் அப்பாவி உயிர்கள் பலியாக கூடாது.
Long live dogs as human life has become secondary