உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கு பயிற்சி: வி.சி., தீர்மானம்

போலீசாருக்கு பயிற்சி: வி.சி., தீர்மானம்

சென்னை: 'போலீசாருக்கு மனித உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்' என, வி.சி., உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அசோக் நகரில், வி.சி., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், அரசியல் ரீதியிலான நிகழ்வுகள், வி.சி., எடுக்கப்போகும் தேர்தல் முடிவுகள், திருப்புவனம் அஜித்குமார் லாக் அப் மரணம், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து நிர்வாகிகளும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் விவாதித்தனர்.பின், போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு, கோவில் காவலாளி அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் தமிழக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது; வரவேற்கத்தக்கது. அதேநேரம், போலீசாரின் வன்முறைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்; அது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்றால் என்ன என்பது குறித்து, போலீசாருக்கு தீவிர பயிற்சி அளிக்க வேண்டும். சித்ரவதை செய்த போலீசாரிடமிருந்து, 1 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். அதை, இறந்து போன அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை