உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உப்பளம் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானம் தொழற்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளான. தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இந்த விமானத்தில் இருந்த 3 பேர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.நேற்று( நவ.,13) வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் புதுக்கோட்டை கீரனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது. இந்த பரபரப்பு அங்குவதற்குள், இன்று மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை