தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
மதுரை, : போக்குவரத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பத்மநாபன் தெரிவித்தார்.திருப்பூர் மண்டலம் தாராபுரம் கிளையை சேர்ந்த பஸ் டிரைவர் கணேசன்,ஜூன் 9 ல் திருப்பூரில் இருந்து மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சை இயக்கி வந்தார். அப்போது பஸ் ஸ்டாண்ட் உதவி மேலாளர் மாரிமுத்துவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணேசனை, மாரிமுத்து செருப்பால் தாக்கியுள்ளார்.அவரை கைது செய்ய வலியுறுத்திதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் நேற்று மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு போராட்டம் நடத்தினர்.அப்போது பத்மநாபன் கூறியதாவது:ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் உதவி மேலாளர் மாரிமுத்துவை கைது செய்ய கோரிதிருப்பூர், கோவையில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாரிமுத்துவைகைது செய்யும் வரை மதுரையை விட்டு வெளியேற மாட்டோம்.பஸ்சில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதே போக்குவரத்து பணியாளர்களின் பாதுகாப்பை அரசு கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற சம்பவம் போக்குவரத்து பணியாளர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கும். டிரைவர், கண்டக்டர் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.பஸ்சில் எந்த பொருட்களை ஏற்ற வேண்டும், ஏற்றக் கூடாது என முறையான வழிகாட்டுதல் இல்லை. இதனால் லக்கேஜ் ஏற்றினாலும்,மறுத்தாலும்பேருந்து டிரைவர், கண்டக்டரை சஸ்பெண்ட் செய்வது வாடிக்கையாகிவிட்டது.நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிக அளவில் இரவில் பஸ் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19 அகில இந்திய விருது பெற்றுள்ளோம். இது பணியாளர்களின் கடுமையான உழைப்பினால் பெறப்பட்டது என்றார்.