உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறு நகரங்களில் மரங்கள் கணக்கெடுப்பு

ஆறு நகரங்களில் மரங்கள் கணக்கெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த, சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில், மரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 23 சதவீதமாக உள்ள பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பசுமை தமிழகம் இயக்கம், 2021ல் துவக்கப்பட்டது. இந்த இயக்கம் வாயிலாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. தற்போது அரசின் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காலி இடங்கள், தனியார் நிலங்களில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. நகரங்களில் பசுமை பரப்பளவு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம் ஆகிய ஆறு நகரங்களில், மரங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது.கணக்கெடுப்பில் தெரிய வரும் விபரங்கள் அடிப்படையில், தேவையான இடங்களில், மரங்கள் அதிகம் நடுவதற்கான பணி முடுக்கி விடப்படும் என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ravi
ஏப் 19, 2025 13:27

Yes கோவை சிட்டி has lost so many trees for many construction and we will have serious impact Inside City trees has to be planted not outside


Iyer
ஏப் 19, 2025 07:27

1 ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் இந்த பசுமைப்புரட்சிக்கு ஒத்துழையுங்கள் 2 குறைந்தது 12 - 15 வகை மரங்கள் நடுவது அவசியம். 3 பாடத்திட்டங்களில் பசுமை பாதுகாப்பு புகுத்தவேண்டும். 4 ரசாயன எருக்களை இடாமல் மாட்டு சாந்தம், வீட்டு கழிவுகளை மட்டும் பயன்படுத்தணும்


Iyer
ஏப் 19, 2025 07:22

பலா , வேப்பமரம், ஆலமரம், அரசமரம், புளியமரம், மாமரம், வில்வம், பூவரசு, போன்ற சுமார் 12- 15 வகை நட்டால் தான் பசுமை கூடும். OXYGEN கூடும். மக்களின் ஆரோக்கியம் பெருகும். ஆஸ்பத்திரிகள், ரசாயன மருந்துகள், நவீன உபகாரணங்களால் எந்தவித லாபமும் இல்லை.


அப்பாவி
ஏப் 19, 2025 07:19

ஜாதி வாரியா கணக்கெடுப்பை நடத்திருங்க.


Kasimani Baskaran
ஏப் 19, 2025 06:35

நகரங்கள் என்று சொல்வதை விட நரகங்கள் என்று சொல்லலாம்..


மீனவ நண்பன்
ஏப் 19, 2025 06:26

ஐந்தாண்டுகளுக்கு முன் ஸ்டாலின் பிறந்த நாளில் 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக செய்தி வந்தது எத்தனை இப்போ மரங்கள் ?