உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி டிஎஸ்பி

மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி டிஎஸ்பி

திருச்சி: வை. பரத் ஸ்ரீனிவாஸ் திருச்சி மாவட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டு காவல்துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக பணிசெய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக உள்துறை செயலாளர்களுக்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இவர் ஸ்ரீரங்கம் மற்றும் புதுக்கோட்டையில் சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s6zrww93&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் திருச்சியில் உளவுப் பிரிவின் ஆய்வாளராக பதவி வகித்து வந்தார்.கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிவோருக்கு நூதனமான முறையில் தண்டனை அளித்து அனைவரையும் கவனத்தையும் பெற்றார் பரத் ஸ்ரீனிவாஸ் . தற்பொழுது அவர் விருப்ப ஓய்வு வேண்டி விண்ணப்பித்து இருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rasaa
ஜூலை 27, 2025 12:53

இந்த தற்குறி ஆட்சியில் மானமும், நேர்மையும் உள்ள யாரும் பணியாற்றமுடியாது.


Geethanjali Nil
ஜூலை 26, 2025 04:52

ஆமாம்..ஒரு சப் இன்ஸ்பெக்டர் கூட ஜாலி ஆக இருக்கும் ஊர். திருச்சிராப்பள்ளி டிஎஸ்பியை யாரும் விரும்புவதில்லை


Jagan (Proud Sangi )
ஜூலை 24, 2025 21:30

சுந்தரேசன், இப்ப ஸ்ரீனிவாஸ். இவர்கள் சமூகம் இந்த வேலைக்கு சரியாக வர மாட்டார்கள். இன்னும் சட்டப்படி நடக்க விரும்பும் கூட்டம். இவர்கள் விட்டு விட்டு போகாமல் இருந்தால் நாட்டுக்கு நலம்.


Anantharaman Srinivasan
ஜூலை 24, 2025 20:48

விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி விருப்ப ஒய்வு கேட்டுள்ள டிஎஸ்பி பரத் ஸ்ரீனிவாசுக்கு என்ன நெருக்கடி..? ஒருவேளை மாதாமாதம் இத்தனை லட்சம் வசூல் செய்து தரவேண்டுமென்று target fix பண்ணியிருப்பாங்களோ..?


சமீபத்திய செய்தி