உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 30ல் திருச்சி - மும்பை விமான சேவை துவக்கம்

மார்ச் 30ல் திருச்சி - மும்பை விமான சேவை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : ''மார்ச் 30ல், திருச்சி - மும்பை விமான சேவை தொடங்கப்பட உள்ளது,'' என, திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று, திருச்சி - சென்னை விமான போக்குவரத்தை துவக்கி வைத்த அவர், கூறியதாவது: பிப்., 14ல், டில்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு நேரில் சென்று, உயர் அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கான அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தேன். அதை ஏற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னைக்கு விமான சேவையை தொடங்கி உள்ளது.இதுவரை, 37 பன்னாட்டு விமான சேவைகளை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கூடுதலாக உள்நாட்டு போக்குவரத்தை தொடங்கியதால், திருச்சி மற்றும் 11 சுற்று வட்டார மாவட்ட மக்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவது மிக முக்கியம் என்பதால், விமானம், ரயில், சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக விமான போக்குவரத்து துறை, ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் இடைவிடாது பணியாற்றி வருகிறேன். மார்ச் 30ல் திருச்சி - மும்பை விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இன்னும் பல உள்நாட்டு விமான சேவைகள், திருச்சியில் இருந்து விரைவில் தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருச்சியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கோவா மற்றும் - டில்லிக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த திருச்சி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Natarajan Ramanathan
மார் 23, 2025 08:43

ஒரு மாதம்கூட இந்த சேவை தொடர்ந்து நடக்காது.


கிஜன்
மார் 23, 2025 06:40

ஆர்வக்கோளாறு எம்.பிக்களால் ஒன்று கூடி தமிழகத்திற்கான திட்டங்களை ஒன்றாக பெற முடியாதா .... திருச்சியிலிருந்து சென்னைக்கு இரு வந்தேபாரத் இரயில்கள் .... ஒரு தேஜஸ் ரயில் என 4 மணி நேரத்தில் சென்னைக்கும் 3:30 மணி நேரத்தில் தாம்பரத்துக்கும் வந்துவிடுகின்றன ... விமான பயண நேரமும் ... ஏர் டைம் 55 நிமிடங்கள் .... செக்கின் வைட்டிங் 2 மணி நேரம் .... பேக்கஜ் 30 நிமிடம் .... என கிட்டத்தட்ட அதே நேரம் தான் ஆகும் ... இந்த சென்னை விமானத்தை மதுரையிலிருந்தோ ... .தூத்துகுடியிலிருந்தோ இயக்கினால் என்ன ?


Iniyan
மார் 23, 2025 06:00

இவர் சொன்ன உடன் விமானம் விட அது என்ன அவர் வீட்டு காரா? பொய் சொல்லுவதே ட்ராவிடியா மக்களுக்கு வேலை


sundarsvpr
மார் 23, 2025 05:58

எல்லா துறையிலும் வகுப்புவாரி சலுகைகள் உள்ளன. சாதாரண மனிதன் விமான சேவை ஆசைப்படலாம். உயர் மற்றும் நடுத்தர வகுப்பினர் விமானத்தில் செல்கின்றனர். முதலில் படித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்ல இரண்டு இருக்கைகள் எளிய மக்களுக்கு ஒதுக்கலாம். இதில் குறிப்பாய் அமைச்சர்கள் மற்றும் பெரிய தனவந்தர் வீடுகளில் பணிபுரிவர்கள் இருத்தல் கூடாது. துஷ்ப்பிரயோகம் நடக்க நிச்சியம் வாயிப்பு ஏற்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை