பழனிசாமியை விரும்பும் த.வெ.க., தொண்டர்கள்
பழனிசாமி கூட்டத்திற்கு த.வெ.க.,வினர் அதிகம் பேர் வருகின்றனர். அவர்கள் வரும்போது கையில் கொடியுடன் வந்து, அதைக் காட்டுகின்றனர். கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை அடுத்து விஜய்க்கு, அரசால் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அவருக்காக குரல் கொடுத்தவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. இதை அறிந்துதான், நன்றிக் கடனாக பழனிசாமி கூட்டங்களுக்கு வந்து, தங்கள் கொடியை காட்டுகின்றனர் த.வெ.க.,வினர். பழனிசாமியை, த.வெ.க., தொண்டர்களும் விரும்புகின்றனர். 'ச்ச்சீ... ச்ச்சீ இந்த பழம் புளிக்கும்' என்பது போல, விஜய் ஆதரவு தனக்கு கிடைக்காத விரக்தியில் தினகரன் ஏதேதோ உளறுகிறார். அ.தி.மு.க., தொண்டர்கள் அடுத்த கட்சியின் கொடியை துாக்கியதாக வரலாறு இல்லை. வி.சி.க., வன்முறை இயக்கமாக மாறி விட்டது. தன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை திருமாவளவன் கண்டிக்க வேண்டும். அவர் சேர்ந்த இடம் அப்படி. - செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,