உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருச்சியில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் சாரண இயக்கத்திற்கு ரூ.10 கோடியில் புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இல்லம் தேடி கல்வி திட்டம் வெற்றி. தமிழகத்திற்கு பெரும் புகழை ஈட்டித் தருகிறது பள்ளிக் கல்வித் துறை.நாட்டுப்பற்று என்பது நிலத்தைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும். மானிட தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் இருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான நிடி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் இந்திய அளவில் தமிழகம் தான் முன்னிலையில் உள்ளது.இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இந்திய நாடு ஒற்றுமையால் விடுதலை பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாம் அனைவரும் சமம் என்ற உணர்வோடு, ஒற்றுமையாக போராடியதால்தான் இந்த விடுதலை கிடைத்தது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்பொழுதும் விட்டுவிடக்கூடாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

என்றும் இந்தியன்
பிப் 03, 2025 17:39

கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இப்படி அவர் சொன்னதை படிக்கவும் உண்மையான அர்த்தம் புரியும்


xyzabc
பிப் 03, 2025 12:46

யார் அந்த மக்கள் ?


Rajarajan
பிப் 03, 2025 10:44

மக்கள் நலம், மக்கள் நலம், என்றே சொல்லுவார். தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் என்று, புரட்சி தலைவர் இவர்கள் குடும்பத்தை அன்றே கணித்தார்.


Jaganathan R
பிப் 03, 2025 10:25

ஊரெல்லாம் சாராயக் கடையை திறந்து விட்டு சாராயம் குடிக்காதீர்கள் பழகாதீர்கள் என்று சொல்வது விளம்பரம் செய்வது தான் உண்மையான ஆட்டுப்பற்று


angbu ganesh
பிப் 03, 2025 09:48

உங்க பற்று எல்லாம் வேணாம் அது கடன் டெபிட் எங்களுக்கு வரவு கிரெடிட் வைங்க அப்போதான் பேச தெரியலேன்னா பேசாம போங்க


Shekar
பிப் 03, 2025 09:46

உண்மைதானே


vbs manian
பிப் 03, 2025 09:28

புல்லரிக்கிறது. பிரித்து பார்த்து பற்று வைக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
பிப் 03, 2025 09:04

திமுகவின் நாட்டுப்பற்று உண்மையில் ஓட்டு பற்று. அதாவது முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மீது மட்டும் பற்று. இந்துக்களிடம் விரோத பற்று. இந்துமத துவேஷத்தை திமுக விட வேண்டும்.


sankaranarayanan
பிப் 03, 2025 08:20

இவருக்கு திராவிட நாட்டைத்தவிர வேறு எந்த நாடும் எண்ணத்தில் எழாது இவர் நாட்டின் ஒற்றுமையைப்பற்றி பேசுவது வேடிக்கையாகவே உள்ளது தகப்பன் - தான் - தங்கை - தமையன் புள்ளையாண்டான்- பேரன் இவர்களை வைத்து அரசியல் செய்யும் இவர் நாட்டைப்பற்றி பேசுவது எந்த நாட்டைப்பற்றி என்று மக்களே கேட்கவேண்டும்


Dharmavaan
பிப் 03, 2025 08:18

நாடு என்றாலே மக்கள்தான் என்றால் அடிப்படை கூட தெரியாத முதல்வர் கேவலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை