உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது

சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் த.வெ.க., என்ற கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி வந்தது.இந்நிலையில், த.வெ.க., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: த.வெ.க., பொதுக்குழு கூட்டமானது மார்ச் 28 காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள அனைவருக்கும் அழைப்புக் கடிதம் இமெயில், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ganeshan R
மார் 15, 2025 16:34

ம்ம்ம்.... நடத்தி....?


orange தமிழன்
மார் 15, 2025 16:19

இவர் அதற்கு சரி பட மாட்டார்...... ஹூம்.....எத்தனை நாளைக்கு இந்த நாடகம் நடக்கும்.....


பேசும் தமிழன்
மார் 15, 2025 13:09

விசிலடித்தான் குஞ்சுகளை நம்பி... ஆழம் தெரியாமல் காலை விட போகிறார்...... அப்புறம் பாருங்கள் நோட்டாவுடன் தான் போட்டி !!!


V K
மார் 14, 2025 22:06

ஹ்ம் அடுத்த அம்மாவாசை வந்துடுச்சு போல் இருக்கு. இவர் ஒருத்தர், அம்மாவாசைக்கு அம்மாவாசை வீட்டைவிட்டு வெளியே வந்து அரசியல் செய்கிறார்.


HoneyBee
மார் 14, 2025 20:51

கூட்டத்துக்கு சின்னம்மா அதான் 3ஷா அம்மா வர்றாங்களா. இல்லை கீத்திக்கா வர்றாங்களா. அட்லீஸ்ட் சோசப்பு வெயிலானதால் பனையூர் பங்களாவை/கேரவானை விட்டு வெளியே வந்து மீட்டிங் வைப்பாரா.


M R Radha
மார் 14, 2025 20:42

இதென்னவோ போணி ஆகுற மாதிரி தெர்ல. யாருக்காவது நல்ல ரேட்ல வித்துரலாம். வித்துட்டு "யாரை நம்பி கட்சி ஆரம்பிச்சேன், போங்கடா போங்க " ன்னு பாட்டு பாடலாம்


Appa V
மார் 14, 2025 20:32

முந்திரி பகோடா பில்டர் காப்பி கொடுத்து தேர்தல் நிதி வசூலித்து தர சொல்வாரா ?


புதிய வீடியோ