உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் விவகாரத்திற்கு மூலகாரணம் இவர்தான்: அ.தி.மு.க., எம்.பி., மீது குற்றச்சாட்டு!

டங்ஸ்டன் விவகாரத்திற்கு மூலகாரணம் இவர்தான்: அ.தி.மு.க., எம்.பி., மீது குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணமே அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டசபையில் அவர் பேசியதாவது; தாம் முதல்வராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விட மாட்டோம் என்று நெஞ்சுரத்துடன் கூறி உள்ளார். அப்படி அறிவித்த தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s5yw7fuf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பிரச்னையின் ரிஷி மூலம் என்ன, நதி மூலம் என்று திரும்பி பார்த்தால், பிரதான எதிர்க்கட்சியின் அ.தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி. மாநிலங்களவையில் பிரச்னை வருகிற போது (அப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்புக் குரல் எழுப்ப, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து பேசியபடி இருந்தார்) அதை ஆதரித்தது உங்கள் ராஜ்யசபா உறுப்பினர் தான். அவர் ஆதரித்தது தான் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்துக்கு மூல முதல் காரணம். நீங்கள் தான் அதை ஆரம்பித்தீர்கள் (அப்போது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் எழுந்து மீண்டும் கூச்சலிட சபாநாயகர் அமைதிப்படுத்தினார்) உங்களின் (அ.தி.மு.க.,) உறுப்பினர் குற்றம் சொல்லும் போது அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்பது எனது கடமை. மத்திய அரசு இதை கொண்டு வந்து அதை ஒத்துக் கொள்ளாமல் தமிழக அரசு இருந்திருக்கிறது. ஏலத்தை கொடுத்த போது அதை எதிர்த்தது தமிழக அரசு. எல்லா வழிகளிலும் நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம். அதன் பின்னர் தான் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தோம். இங்கு பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசியல் ஆதாயம் செய்து குளிர்காய விரும்புகிறீர்கள் (அப்போது அ.தி.மு.க., உறுப்பினர்கள் கூக்குரல் எழுப்ப, சபாநாயகர் அமைதியாக இருக்கும் படி கூறுகிறார்) தொடர்ந்து கூச்சலிட்டதால் முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டார். அப்போது அவர் பேசியதாவது; நீங்கள் (அ.தி.மு.க.,) தீர்மானத்தை ஆதரித்தீர்கள், அதற்காக நன்றி சொல்கிறோம், மறுக்கவில்லை. ஆனால் இதே பிரச்னையை உங்கள் உறுப்பினர் பேசும்போது, ஆட்சிக்கு மக்களிடத்தில் இடத்தில் நம்பிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது என்று எல்லாம் பேசினார். அதனால் தான் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருக்கிறது என்று பேசினார். ராஜ்யசபாவில் உங்கள் உறுப்பினர் என்ன பேசினார். அது தான் இங்கே கேள்வி. அதைத் தான் அமைச்சர் இங்கே கூறுகிறார். நீங்கள் ஆதரித்ததை இல்லை என்று சொல்கிறீர்களா? பேசவில்லை என்று கூறுகிறார்களா? ஆதாரத்துடன் நான் சபாநாயகருக்கு பேசுகிறேன், நீங்கள் உங்கள் ஆதாரத்தை தாருங்கள், ஒரு முடிவு எடுக்கலாம். உங்கள் ராஜ்ய சபா உறுப்பினர் தம்பிதுரை அவையில் (ராஜ்யசபா) அதை ஆதரித்து பேசியிருக்கிறார். அதுதான் உண்மை. இல்லை என்று மறுக்கிறீர்களா? என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு தமது பதிலை தொடர்ந்தார். அவர் பேசியதாவது; அரியவகை கனிம வகைகள் என்று மாநில அரசின் உரிமையை மீறி மத்திய அரசு எடுத்துக் கொண்ட போது அதை நீங்கள் (அ.தி.மு.க.,) ஆதரித்ததன் விளைவுதான் டங்ஸ்டன் விவகாரமாக வந்திருக்கிறது. மத்திய அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூறாமல், தமிழகத்தை குறை கூறுகிறீர்கள் என்றால் யாருடன் கூட்டணி வைத்து நீங்கள் இயங்கி கொண்டிருக்கிறீர்கள். தமிழக அரசு ஒருபோதும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்காது, வரவே விடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முதல்வர் முதல்வராக பதவியில் இருக்கும் வகையில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டசபையில் நடைபெற்ற இந்த விவாதத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த இடத்திலும் அ.தி.மு.க., எம்.பி. தம்பிதுரையின் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை. அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் கூறும் போது அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை என்று பெயர் குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
ஜன 08, 2025 20:05

டங்ஸ்டன் அரியவகை கனிமம்.இந்தியாவின் தொழிற் உற்பத்திக்கு அத்யாசியம் . மதுரைக்கு டங்ஸ்டன் சுரங்கம் வரும். மத்திய அரசு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டது. இதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது. தொடர்ந்து போராட்டம் நடத்தினால், ரயில்வே, போஸ்டல், வங்கி போன்று, வடமாநில தொழிலாளிகளை வைத்து சுரங்கம் அமைக்கப்படும். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது.


அப்பாவி
ஜன 08, 2025 16:34

ஸ்டெர்லைட்டுக்கு தி.மு.க டங்ஸ்டனுக்கு அதிமுக.


என்றும் இந்தியன்
ஜன 08, 2025 16:31

இனிமேல் ஸ்டாலின் முதல் எல்லா திமுக கஸ்மாலங்கள் வரை அவர்களது வீட்டிற்கு மின்சாரம் வேண்டாம் என்று மின்சார இணைப்பை துண்டித்து விடுவார்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். அவர்கள் வீட்டில் இனிமேல் அகல் வேலைக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு தான் எரியும் அப்படித்தானே???அறிவிலிகளே-டங்ஸ்டன் தாமிரம் - மின்சாரம் 100% சம்பந்தம்


Madras Madra
ஜன 08, 2025 15:44

மக்களுக்கு சந்தேகம் பயம் இருக்கும் அதை கையாளும் திறன் அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது ஓட்டு மட்டுமே முக்கியம் முன்னேற்றங்கள் முக்கியம் இல்லை என்றே கட்சிகள் அரசியல் நடத்துகின்றன ஜன நாயகத்தின் கேடு ஒட்டு அரசியல் எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனில் மக்கள் யாரோ ?


PARTHASARATHI J S
ஜன 08, 2025 15:11

தமிழகத்திற்கு ஆதாயமும், பாதகமும் அறிந்து திட்டங்களை ஆமோதிப்பது நல்லது. ஒரு சமயத்தில் நல்லது என்பது காலப்போக்கில் கெட்டதாகத் தெரியும். அந்த மாதிரி சமயங்களில் நிபுணர் குழுவை அமைப்பது உத்தமம். சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து நிறை,குறைகளை பட்டியல் இடலாம். அரசியல் காரணங்கள் ஈகோ சம்பந்தப்பட்டது. தேவையற்றது. சுற்றுப்புறத்தினை தீங்கில்லாமல் செய்து வேலை வாய்ப்பினை உயர்த்தினால் அதனை ஏற்பது சாலச்சிறந்தது. சட்டசபையில் சண்டையிடுவதால் மக்களின் நகைப்புதான் மிஞ்சும்.


ஆரூர் ரங்
ஜன 08, 2025 14:50

மீத்தேன் திட்டத்தில் ஒப்புதல் கையெழுத்திட்ட ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்பாரா? கூவம் வீராணம் திட்டங்களை தகுந்த காரணமின்றி நிறுத்திய திமுக அதில் வீணாக்கிய ஏழைகளின் வரிப்பணத்தை திருப்பிக் கொடுப்பாரா? அதையெல்லாம் விட்டுவிட்டு பங்காளி மீதே பாயலாமோ?


Svs Yaadum oore
ஜன 08, 2025 14:45

தமிழ் நாடு முழுக்க ஆறு ஏரி குளம் குட்டை என்று அனைத்தும் அழித்தது யார் ?.....மனித வரலாற்றில் இல்லாத ஆற்று மணல் கொள்ளை நடக்குது ..அதன் விளைவுகள் என்ன என்பதும் தெரியாது ..விடியல் ஆட்சியில் கன்யாகுமரியில் மலையை பெயர்த்து கேரளாவுக்கு ஏற்றுமதி .....இப்பொது அரிட்டாபட்டி மலையில் விடியல் கிரானைட்Granite எடுப்பதற்காக தடை கோரி மக்கள் போராடினால் அவர்கள் மேல் விடியல் வழக்கு பதிவு ....


Svs Yaadum oore
ஜன 08, 2025 14:34

அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனராம் .....இதெல்லாம் அக்கிரமம் அநியாயம் ....அரிட்டாபட்டி மலை மற்றும் அதில் உள்ள நீர் நிலைகள் வைத்துதான் அதே ஊரே வாழுது ....இந்த மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள் .....பல ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட்Granite எடுப்பதற்காக தமிழக அரசு அளித்த உத்தரவால் தங்கள் கிராமத்தில் இருக்கும் மலையில் இரவு நேரத்தில் ஆய்வு செய்து வருபவர்களை தடுக்கும் பொருட்டு அரிட்டாபட்டி கிராம மக்கள் போராட்டம்..அரிட்டாபட்டியின் மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது ...இதை அழிப்பதற்குத்தான் விடியல் திராவிடனுங்க முயற்சி ...


kulandai kannan
ஜன 08, 2025 14:18

நல்ல வேளை, இன்றைய ஸ்டெர்லைட், டங்க்ஸ்டன் எதிர்ப்பாளர்கள் 70 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் திருச்சியில் BHEL, நெய்வேலியில் NLC, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் போன்றவை வந்திருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை