உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.,வில் 30 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

த.வெ.க.,வில் 30 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

த.வெ.க., ஆட்சிக்கு வந்தது, தமிழகத்திற்கு கரும்புள்ளி விழுந்து விட்டது. எல்லைச்சாமியாக இருந்து விஜய் காப்பார் என எதிர்பார்த்த மக்கள், ஏமாந்துவிட்டனர். குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை; பாலியல் வன்கொடுமைகள் பெருகி விட்டன. சட்டம் – ஒழுங்கு சீர்கேடால், த.வெ.க., கூட்டணியில் இருந்து கம்யூ., கட்சிகள் விலகும் முடிவில் உள்ளனர். தமிழக மக்கள், அ.தி.மு.க., – தி.மு.க.,வை நினைத்து பார்க்கின்றனர். எந்த பிரச்னை குறித்தும், முதல்வர் விஜய் பேசுவதில்லை. ஜோதிடர் சொன்னால் தான் பேசுவாரா? பெண் கலெக்டருக்கு தவறான 'மெசேஜ்' அனுப்பிய எம்.எல்.ஏ.,வை, சினிமா பாணியில் விஜய் கண்டிப்பார் என பார்த்தால், பரிசளித்து, தட்டிக் கொடுத்துள்ளார். த.வெ.க.,வில் 30 எல்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானம் செய்யவே, முதல்வர் அழைத்து பேசியுள்ளார். விரைவில் இந்த ஆட்சி கலையும். – செல்லுார் ராஜூ முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
நவ 15, 2026 22:29

ஐயா, உங்கள் கவனத்தை சிதறடிக்காதீர்கள். வைகை, மேட்டூர் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நீர் வெளியேற்றும் கதவுகளை மூடினாலும் நீர் மட்டம் குறைகிறது, ஏன் குறைகிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். உங்கள் அனுபவத்தின் படி, அவர்களுக்கு தக்க ஆலோசனை சொல்லுங்களேன்.


புதிய வீடியோ