உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயிலாடுதுறை அருகே த.வா.க. பிரமுகர் படுகொலை!

மயிலாடுதுறை அருகே த.வா.க. பிரமுகர் படுகொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி. பா.ம.க., மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் மணிமாறன் (34) என்பவருக்கும் இடையே இட பிரச்சனை தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9vdyyxhe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02021ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இரவு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட தேவமணியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட மணிமாறன் தற்போது ஜாமினில் உள்ளார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகராவும் இருக்கிறார்.இந் நிலையில் மயிலாடுதுறைகளில் நடந்த அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் மணிமாறன் கலந்து கொண்டு காரில் ஊர் திரும்பியுள்ளார். வழியில் செம்பனார்கோவில் காளகஸ்திநாதபுரம் தனியார் கல்லூரி எதிரே 2 கார்களில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து காரை சேதப்படுத்தியதுடன், மணிமாறனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் தலை சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார்.தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன், கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 04, 2025 20:52

முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் அல்லது அவர் தொகுதியில் இப்படி கொலைகள் தொடர்ந்து நடந்தால் முதல்வர் என்ன செய்வார்?


Raghavan
ஜூலை 04, 2025 21:40

அவர் சர்வாதிகாரியாக மாறிவிடுவார். சட்டம் நீதி எல்லவற்றையும் தனது கையில் வைத்துக்கொள்வார்.


தமிழ்வேள்
ஜூலை 04, 2025 20:26

தமிழக எல்லைகளை முழுமையாக சீல் வைத்து விட்டு, இணையம் & மொபைல் தொடர்புகள், தேசியம் அற்ற திராவிட பத்திரிக்கைகளை ஒருவாரம் தடைசெய்து, பின் பாரத ராணுவத்தை முழு சுதந்திரத்தோடு உள்ளே இறக்கி ஒரு காட்டு காட்டினால்தான் தமிழக திராவிஷ குஞ்சுகளுக்கு தேசிய அரசு என்றால் என்ன? ஒழுங்கு என்றால் என்ன? என்று மண்டையில் ஏறும்..அடியாத மாடு படியாது... கதற... கதற... உதை வாங்கினால் தான் திராவிஷனுக்கு ஒழுங்கு என்பது உறைக்கும்...


தஞ்சை மன்னர்
ஜூலை 04, 2025 19:52

அரசியல் கொலைகள் ஆரம்பமாகிவிட்டது.பார்க்கலாம். எதுவரை போகும் என்று


rajasekaran
ஜூலை 04, 2025 18:58

இன்று ஒரு தகவல் மாதிரி தமிழ்நாடு ஆகிவிட்டது. இனிமேல் செய்தி தால்களிலில் நேற்று நடைபெற்ற கொலைகள் என்று ஒரு தனி இடம் போட்டுவிடலாம் .


சமீபத்திய செய்தி