உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாடு மிகப்பெரிய வெற்றி: ரஜினி வாழ்த்து

த.வெ.க., மாநாடு மிகப்பெரிய வெற்றி: ரஜினி வாழ்த்து

சென்னை : ''தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது; நடிகர் விஜய்க்கு என் வாழ்த்துக்கள்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன், நேற்று காலை அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி, 'ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்' என்றார்.அப்போது ரஜினியிடம், 'டிவி' நிருபர்கள் சிலர், 'சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், தன் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியது குறித்து உங்களின் கருத்து என்ன?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, ''த.வெ.க., மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது; விஜய்க்கு என் வாழ்த்துக்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GoK
நவ 01, 2024 18:17

இவரே ஒரு வெத்து வேட்டு இவரென்ன வாழ்த்து சொல்வது.அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் தமிழ் மக்கள் யாரை தேர்ந்தெடுக்கறாங்க ஒரு தராதரமில்லை...இவர், சுடலை ...இன்னும் எவரெல்லாம் வரப்போறாங்களோ


M Ramachandran
நவ 01, 2024 11:30

எதுக்கும் கொடகல்லு பிரதர்ஸ் கிட்டா கேட்டு ஜாக்கிரதையா அறிக்கையை விடுங்க. ஆபத்தா போயிட போகுது.


angbu ganesh
நவ 01, 2024 10:50

நீங்க சொல்றத எப்படி எடுக்கறது சார் ரஜினியை அவரது ஸ்டைல் நடிப்பை பார்த்து விஜய் நடிக்க வந்தார் ரஜினி அரசியலுக்கு வந்தாதான் அவர் வரலேன்னா கோழையா விஜய் மனத்துல சில விடுபட்டு இவர் பேச பயந்த வசங்களை தான் அந்த மேடைல பேசினார் சில ஆயிரம் பேர்களின் முன்னால bouncers இருக்கற தைரியத்துல பேசிட்டர் வெயிட் அண்ட் சி எவ்ளோ நாள் தாக்கு பிடிக்கறாருன்னு இருந்தா வாழ்த்துக்கள்


N Annamalai
நவ 01, 2024 09:18

தான் செய்ய முடியாததை திரையில் கதாநாயகன் செய்கிறான் என்பதால்தான் சாதாரண மனிதன் அந்த கதாநாயகனை போற்றுகின்றான் .அது போல் இவர் தான் செய்ய முடியாததை வேறு ஒருவர் செய்கிறார் என்பதால் பாராட்டுகிறார் .என்ன ஆனாலும் அடுத்த படம் ஓட வேண்டும் அல்லவா ?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை