உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாட்டுக்கு போனவர்கள் யார்... யார்...? களத்தில் இறங்கிய உளவுத்துறை

த.வெ.க., மாநாட்டுக்கு போனவர்கள் யார்... யார்...? களத்தில் இறங்கிய உளவுத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளனர்.தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரத்தில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திக் காட்டினார். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மற்ற அரசியல் கட்சிகளை மிரள வைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=crvzlr5w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் கட்சி, மாநாடு, 2026ம் ஆண்டு தேர்தல் களம், யாருடன் கூட்டணி என நடிகர் விஜயின் தொடர் அறிவிப்புகள் த.வெ.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. தமிழகம் முழுவதும் ஆக்டிவ் அரசியல் என்ற ஸ்டைலை நோக்கி தொண்டர்களும், நடிகர் விஜயின் ஆதரவாளர்களும் நகர ஆரம்பித்துவிட்டதாக பேச்சுகள் எழுந்து வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைமையில் கூட்டணி என்று நடிகர் விஜய் அறிவித்துவிட தேர்தல் களமும் மாற ஆரம்பித்துள்ளது. நேரிடையாக, தனித்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே கட்சியின் உண்மையான பலம், ஓட்டு வங்கி உள்ளிட்ட அம்சங்கள் தெரிய வரும். அதுவரை கட்சிக்கான செல்வாக்கு என்ன என்பதை கூறுவது தவறான கணிப்பாகிவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.இந்நிலையில் விழுப்புரம் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் யார் என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை இறங்கி உள்ளதாக தெரிகிறது. கூட்டத்துக்கு வந்தவர்கள் யார், யார், மற்ற கட்சிகளில் இருந்தாலும், நடிகர் விஜய் ரசிகராக இருப்பவர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்ற விவரங்களை மாவட்ட நிர்வாகிகளிடம் உளவுத்துறை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக, சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சென்றவர்களின் விவரங்களில் உளவுத்துறை அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. சென்னையில் உள்ள வார்டுகள் வாரியாக பட்டியல் தொகுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தெந்த வார்டுகளில் எத்தனை பேர் த.வெ.க., உறுப்பினர்களாக உள்ளனர், அவர்களில் எத்தனை பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர் என்ற விவரங்களை சேகரித்து வருவதாக தெரிகிறது.இதுதவிர, கலந்து கொண்டவர்களில் எந்த வயதுடையோர் அதிகம், அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா, மகளிர் அதிகம் பேர் கலந்து கொண்டனரா, தாய்மார்கள் ஆதரவு யாருக்கு என்ற கூடுதல் விவரங்களையும் சேகரிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க., நிர்வாகிகள் பலரிடமும் மேற்கண்ட தகவல்களை திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Thamilarasu K
நவ 20, 2024 16:48

தேவையில்லாத ஆணிகளை கண்டறியும் துறை


அப்பாவி
நவ 20, 2024 01:26

வெட்டி வேலை பார்ப்பதற்கே நேரம் சரியா இருக்கு இவிங்களுக்கு.


ngm
நவ 19, 2024 21:40

அப்போ வேங்கை வயல் சம்பவம், கள்ளக்குறிச்சி சம்பவம் பத்தி எந்த உளவுத்துறை விசாரிக்கும்? விடியா மாடல்


Andrew Selvakumar
நவ 19, 2024 21:07

தவெக ன் ஆரம்பமே ஸ்லோவ், ஸ்டெடி, வின் தி ரேஸ். அமலாக்கதுறை சோதனை என்பது கட்டிடத்தின் அடிமட்ட தூண்களுக்கு வெடி வைத்து தககர்த்தது போல் இருந்தது. ஊடக வாயிலாக உலகறிந்த விஷயம். சமீபத்திய சூப்பர் ஸ்டார் ன் பேச்சு விளையாட்டு போல் இருந்தாலும் பலூனை ஊசி வைத்து வெடித்தது போல் இருந்தது. நுண்ணறிவு உளவு துறை செயல்படுவது அவர்களின் வேலை அவ்வளவு தான்.


Gopalasamy.k
நவ 19, 2024 20:59

ஆணவத்துடன் ஆடியவர்கள் தொடை நடுங்குகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 19, 2024 20:18

தாயறியாத சூழலுண்டா என்ற பழமொழி இதற்கு பொருந்துகிறது ..... திமுகவுக்குத் தெரியாதா இந்த விவரம் .....


Jagan (Proud Sangi)
நவ 19, 2024 19:46

இது சுவிசேஷ கூட்டம் போல இருந்தது. நான் என்னதான் நடக்குது என்று போயிருந்த போது பைபிள் எல்லாம் எனக்கு கொடுத்தார்கள். நானும் வாங்கி கொண்டேன் வேண்டாம் ன்றால் என்ன ஆகும் என்று பயமாக இருந்தது சுற்றி இருந்தவர்கள் என்ன செய்வார்களோ என்று .


sankaranarayanan
நவ 19, 2024 18:32

மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரித்து பிறகு அவர்கள் அனைவரையும் ஏதாவது ஒரு சட்ட பிரிவில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பார்கள். பிறகு அங்கே இடவசதி போராததால் விடுதலை செய்வார்கள். இதுதான் திராவிட ஆட்சியின் மஹிமை.


D.Ambujavalli
நவ 19, 2024 17:47

தலைகள் எண்ணிக்கை, எந்தெந்த கட்சியில் இருந்து எத்தனை பேர், நல்ல. பொழுது போக்கு உளவுத்துறைக்கு அப்படியே இவர் கட்சி ஆட்கள் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? வேலையற்ற வேலை


S. Venugopal
நவ 19, 2024 16:33

வைக்கோல்போரில் ஊசியை தேடும் வேலை


புதிய வீடியோ