உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜ முதுகின் பின்னால் பதுங்கி கொள்ளும் திமுக: நடிகர் விஜய் குற்றச்சாட்டு

பாஜ முதுகின் பின்னால் பதுங்கி கொள்ளும் திமுக: நடிகர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை; பாஜ முதுகிற்கு பின்னால் திமுக பதுங்கி கொள்கிறது என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zp41oj58&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=075 ஆண்டுகளை கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக் கொள்ளும் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக, தமிழர் பெருமையான சோழ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் பாஜ அரசு இதை கையில் எடுத்திருக்காது. இதையெல்லாம் செய்யாமல், பிரதமர் வருகை தமிழகத்துக்கு பெருமை என்று வாஞ்சையாக சொல்லி சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு.சோழ பேரரசின் பெருமையை கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து பாஜ கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு.கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் பாஜ அரசு, இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றி பேசி உள்ளது. முழுக்க முழுக்க கபட நாடகமன்றி வேறென்ன? ஏற்கனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாக கொட் திமுக இப்போது பாஜ அரசின் கபட நாடகத்திற்கு தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது.எதிர், எதிராக இருப்பது போல காட்டிக் கொண்டே உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் திமுகவையும், பாஜவையும் ஓரணியில் கபடதாரிகள் என்றுதானே அழைக்க வேண்டும்? நாம் இப்படிச் சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும், மக்களுக்கு தவெக உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும்.அரசியலில் தன் இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் தவெக, தமிழக வரவாற்று பெருமைகளின் மீது பெரும் அக்கறை கொண்ட பேரியக்கம். சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமைகளை பறைசாற்றும் பிரமாண்டமான அருங்காட்சியம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டிலேயே தவெக தீர்மானம் இயற்றியது.ஆனால் பவள விழாக் கண்ட இந்த திமுகவோ, பாஜ முதுகிற்கு பின்னால் பதுங்கிக் கொண்டு பம்முகிறது. கொள்கை, கோட்பாடுகளுடன் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்து கொண்டு, தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் எதிராக பாஜவிடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை.இல்லை, இல்லை இதுதான் திமுக தலைமை குடும்பத்தின் வாடிக்கை.மறைமுகமாக பாஜவும், திமுகவும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவர்கள் இருவரின் மறைமுகமான கபட நாடக அரசியலுக்கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறதியாக தருவார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vijai hindu
ஜூலை 29, 2025 00:51

பாவம் பொது அறிவு இல்லாத நடிகன் அடுத்த துண்டு சீட்டு தயாராகிறது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 28, 2025 21:42

ஒரு பாமர இந்திய குடிமகனின் அறிவு கூட இல்லாத சவலை குழந்தையின் தற்குறி அறிக்கை.....!!!


Ramesh Sargam
ஜூலை 28, 2025 20:56

ஏற்கனவே தமிழக மக்கள் ஒரு மனநலம் பாதித்தவனிடம் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். இதில் மேலும் ஒரு மனநோயாளியா? இவங்களை சமாளிப்பதற்குள் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டுவிடும்.


Ramesh Sargam
ஜூலை 28, 2025 20:05

என்ன இவர் புதுஸ்ஸா குட்டையை குழப்புகிறார். பாஜக முதுகின் பின்னால் திமுகவா?


R.MURALIKRISHNAN
ஜூலை 28, 2025 20:00

சினிமாவில் நடிப்பே வராத உனக்கு அரசியலில் என்ன ஒரு நடிப்பு. எவனோ எழுதி கொடுத்த துண்டு சீட்டு படிக்கும் உனக்கு பிரதமரை பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை


R.MURALIKRISHNAN
ஜூலை 28, 2025 19:55

கண்டிப்பாக நடிகனே, கண்டிப்பாக. வரும் தேர்தலில் உன்னுடைய கட்சியையும் உன் கூட்டாளி திருடர் முன்னேற்ற கழகத்தையும் குழி தோண்டி புதைத்து புதிய சாம்ராஜ்யம் படைப்போம்.


Thangaiahnadar Senthil kumar
ஜூலை 28, 2025 19:39

எப்போதும் DMK தமிழருக்கு எதிராகவே இருந்திருக்கிறது ஆனா தமிழக மக்கள், எச்ச இலவசங்களுக்காக ஒட்டு போட்டு தமிழகத்தை அடமானம் வைத்துள்ளார்கள் எப்போது ஈழ தமிழர்கள் அளிக்கப்பட்டார்களோ அப்போதே அளித்திருக்க வேண்டு DMK வை எப்போது தமிழர்களை குடிக்கு அடிமை ஆக்கினார்களோ அப்போதே அளித்திருக்க வேண்டு DMK வை ஆனால் இப்போது தமிழர்களின் ரத்தத்தை குடிக்க இன்னொரு கிறிஸ்டியன் machinery இனியாவது தேசியத்தின் பக்கம் நிற்போம்.... தமிழர்களின் உரிமை, கலாச்சாரம், பண்பாடு காப்போம்....


Ramesh Sargam
ஜூலை 28, 2025 19:32

முற்றும் பிதற்றல்.


Balaa
ஜூலை 28, 2025 19:12

,அறிக்கையின் பின்னால் ஒளிந்து கொண்டு இவன் காமெடி அரசியல் பண்ணுகிறான். அந்த கீழடி அசைக்க முடியாத ஆதாரத்தை பற்றி கொஞ்சம் பிட் அடிக்காம ஒரு நாலு வார்த்தை பேசேன். நீதான் அகழாய்வு மன்னன் ஆச்சே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை