உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம்; விஜய் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம்; விஜய் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செப்.13 முதல் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் தொடங்குகிறார். மொத்தம் 14 சனிக்கிழமைகள், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் பிரசாரம் செய்கிறார். தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. செப்.13ம் தேதி தமது பிரசாரத்தை அவர் தொடங்கி டிச.20ல் முடிக்கிறார். இந்த 4 மாதங்களில் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்கிறார். அக்டோபர் 5ம் தேதி ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பயணத் திட்டம் விவரம் வருமாறு; சனிக்கிழமை பிரசாரம்; செப்டம்பர் - 13, 20, 27 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், வடசென்னை அக்டோபர்- 4,11, 18, 25 - கோவை, நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்சென்னை, செங்கல்பட்டு நவம்பர்- 1, 8, 15,22, 29 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, விருதுநகர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம்டிசம்பர் - 6,13,20 - திண்டுக்கல், தேனி,மதுரை அக்டோபர் - 5 - ஞாயிற்றுக்கிழமை - கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோடு மொத்தம் 14 ஊர்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார பட்டியலில் ஒரே ஒரு ஊரில் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை கமென்ட் செய்து சொல்லுங்க, வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

S.V.Srinivasan
செப் 10, 2025 08:36

மற்ற நாட்களில் சினிமா ஷூட்டிங் இருக்கு. அந்த பொழப்பையும் பார்க்கனமுள்ள. அரசியல் பார்ட் timethaane.


Natarajan Ramanathan
செப் 10, 2025 02:45

தமிழக மக்களை தேடி "சனி" வரும் என்று சூசகமாக சொல்கிறார்.


Muthuchamy y t
செப் 10, 2025 02:00

ஞாயிற்று கிழமைகளில் அவர் சர்ச்சுக்கு செல்வார்


Murthy
செப் 10, 2025 01:20

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அப்போதுதான் விடுமுறை . ......அந்த கூட்டத்தில் பாதிப்பேருக்கு ஒட்டு கிடையாது.


தமிழ்வேள்
செப் 09, 2025 21:48

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்.. பூசாத மாதிரியும் இருக்கணும்....


Modisha
செப் 09, 2025 21:43

ஞாயத்துக்கிழமை அவருக்கு முக்கியமான வேலை இருக்கு. தெரியுமா .


Venkat esh
செப் 09, 2025 21:33

தொளபதி க்கு தெரியும் வார நாட்களில் ரசிகர்கள் வர மாட்டார்கள்..... அதனால் பஞ்ச் டயலாக் பேசினால், விரலை சொடுக்கினால் ஒரு கூட்டம் வரும் என்று..... அந்த விடலை கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும் தொளபதி சினிமாவில் வசூல் வடை சுட்டு தான் ஒரு உச்சா நடிகர் என்று எஸ்டாபிலிஷ் செய்ய பல மீடியா என்ற போர்வையில் உள்ளவர்களை விலைக்கு வாங்கி பிழைப்பு நடத்தியது போல அரசியலிலும் நோகாமல் நொங்கு திங்க வருகிறார்....


Ramakrishnan Sathyanarayanan
செப் 09, 2025 19:46

ஒவ்வொரு வாரமும் தனது கடந்த வார பிரச்சாரத்தையும் மக்கள் அளித்த கோரிக்கைகளையும் அலசி ஆராய்ந்து அடுத்த வார பிரச்சாரத்தில் அமல் படுத்துவாரோ என்று தோன்றுகிறது.


Durai Kuppusami
செப் 09, 2025 19:37

காரணம் என்னவாக இருக்கும்.... என்ன கேள்வி உங்களுக்கு தெரியாதா.. காரணம் என்னவாக இருக்கும் என்று......


Sundar R
செப் 09, 2025 19:22

தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளவேண்டும். கட்சி அதிகாரங்களும், ஆட்சி அதிகாரங்களும் தமிழர்கள் கையில் தான் இருக்க வேண்டும்.விஜய் ஒரு தெலுங்கு மிஷனரி கிறிஸ்தவர். நம் தமிழ்நாட்டை தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழர் தான் ஆளவேண்டும். தற்போது தமிழக சட்டசபை முழுவதும், தலைமைச் செயலகம் முழுவதும் நாயுடுக்களாகவும், ரெட்டிகளாகவும் இருப்பதால் அங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களுக்கு மரியாதை இல்லை. தற்போது இருக்கும் இந்த இழிநிலை தமிழர்களுக்கு 2026-லும் தொடரக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை