உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்தம்; நிர்வாகிகளுக்கு விஜய் சீக்ரெட் மெசேஜ்

வாக்காளர் பட்டியல் திருத்தம்; நிர்வாகிகளுக்கு விஜய் சீக்ரெட் மெசேஜ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 18 வயது நிரம்பிய வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு த.வெ.க., நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார். அவரது கட்சி பற்றி தான் மற்ற அரசியல் கட்சிகள் சுற்றி சுற்றி பேசி வருகின்றன. அதே வேளையில் தமது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு என்று நடிகர் விஜய் பிரத்யேகமாக சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தெரிகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qlnvb23e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுபற்றி த.வெ.க., நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்ட தகவல்கள் வருமாறு; புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும், வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் அவர்களை கண்டுபிடித்து பட்டியலில் சேர்க்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று விஜய் கூறி இருக்கிறார். கட்சி ஆரம்பித்த பின்னர் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் முதல் தேர்தல். இதை சவாலாக ஏற்றுக் கொண்டு நினைத்த இடத்துக்கு வர வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள், முகவரி மாறி இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். அந்தந்த பூத்துகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி, 18 வயது நிரம்பியவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு த.வெ.க., நிர்வாகிகள் கூறி உள்ளனர். நடிகர் விஜய்யின் அறிவுறுத்தல்களை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களை சேர்க்கும் பணிகளில் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

GMM
நவ 09, 2024 16:59

தமிழக, கேரள , மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவு மாநில ஆளும் கட்சி கையில். தமிழகத்தை பொறுத்தளவில் தேர்தல் நடத்துவது திராவிடம். அதிக சாதி, சிறுபான்மை மத வாக்காளர் ஆதரவு வெற்றிக்கு போதும். கலப்பு மொழி, சாதி, மதம் கலந்த நாடு, இந்தியா. எந்த வரியும் செலுத்துவது இல்லை என்றால் , வாக்கு சீட்டு மதிப்பு 10. உள்ளாட்சி வரி 25. மாநில வரி 30. மத்திய வரி 35. அல்லது வெற்றிக்கு 50 சதவீதம் மேல். அல்லது அதிக குறைந்த வாக்கிற்கு விகித முறை. பதிவு கட்சிகள் கட்டாயம் போட்டி. இதனை தேர்தல் ஆணையம் அமுல் படுத்த முடியும்.


சமூக நல விருப்பி
நவ 09, 2024 16:11

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக மற்றும் அண்ணா திமுக இரண்டும் சேர்ந்து மக்களை குடிகாரர்களாக்கி பெண்கள் தாலி இழந்து அவர்கள் குடும்பம் இன்று தாத்தாலிக்கிறத. அதை பற்றி எந்த திராவிட கட்சிகளுக்கும் அக்கறை கிடையாது. இவர்கள் சொத்து சேர்க்க வேண்டும் அது தான் அவர்கள் குறி. அதனால் இனி திராவிட ஆட்சி வர கூடாது


தமிழன்
நவ 09, 2024 14:25

பொறுத்து இருந்து பாருங்கள்.. தேர்தல் வரும் போது ஓபிஎஸ் போல வாக்குகளை பிரித்து திமுகவின் பி டீம் ஆக இருந்து திமுகவை வெற்றி பெற செய்வார். கோடிகள் அங்கே மாறும். திமுக ஆட்சியில் மக்கள் தெருக் கோடியில் நிற்பார்கள். வருமானமும் போச்சு மாநில வளமும் போச்சு என தேர்தலுக்கு பிறகு மக்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள்.


தமிழன்
நவ 09, 2024 14:22

எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் அரசியலில் விஜய் பெற முடியாது என்பது தான் எதார்த்தம். பந்தயத்தில் ஓட வந்து விட்டார்.. ஓடி பார்க்கட்டும். இவர்கள் ஓட்டை பிரித்து தமிழ் நாட்டுக்கு நல்லது செய்வதற்கு பதில் மீண்டும் திமுகவை ஆட்சி பொறுப்புக்கு வர வைத்து விடுவாரோ என்று தான் தமிழக மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 13:44

விஜய் யைப் பார்க்க விக்கிரவாண்டி வந்தவர்களில் 70 - 80% பேருக்கு வாக்காளர் அட்டையே இல்லை. எங்கள் தெரு முனையில், விஜய் ரசிகர் மன்ற பசங்க கிட்ட பேசின போது, ஒருத்தன், செயலாளராம், சொல்றான், " ஆதார் கார்டு இருக்கு அங்கிள், இதைக் காட்டியும் ஓட்டு போடலாமே. இதுவும் accepted ID தானே என்கிறான். அவனுக்கு, ID வேற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது வேற என்று விளக்கினேன். புரிஞ்சுக்கற மாதிரி தெரியல. வுட்டுட்டேன். தேர்தல் சமயத்தில், எங்களின் வாக்குகள் காணவில்லை, where is my vote என்று ஒரு அமளி, கலாட்டா sure.


சமூக நல விருப்பி
நவ 09, 2024 13:39

விஜய் அவர்கள் வேகம் நன்கு தெரிகிறது இதே வேகத்தை இனி எப்போதும் காட்டினாள் தமிழகம் நிச்சயம் முன்னேறும். திருட்டு திராவிட மாடல் அரசு கூட்டு சேர்ந்து இனி எப்படி மற்ற கட்சிகளையும் மக்களையும் ஏமாற்றலாம் என்று யோசிப்பார்கள். அதனால் இனி வரும் தேர்தல்களில் மடா குடிகாரகளுக்கு பத்து சதவீகித்துக்கு மேல் ஆல்கஹால் இருப்பவர்கள் ஓட்டு போட தகுதி கிடையாது என்ற சட்டத்த உடனடியாக அமு ல் படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 15:02

உங்களின் பாஷையில் விஜய் அல்லேலூயா மிஷநரி கூட்டத்தைச் சேர்ந்தவராச்சே? அவருக்கு சாமரம் வீசறீங்க?? விசித்திரம். அதாவது ஒண்ணுத்துக்கும் ஆகாத கூட்டத்தையும் லைம் லைட் டில் வெச்சிருக்கணும் ல"


Dhurvesh
நவ 09, 2024 13:08

சிரிப்பு வருது ஸ்டாலின் 2024 வேர்ல்ட் கப் வின்னர் 40/40 ஆனா விஜய் ஜோசப் இன்னும் ஒரு மேட்ச் கூட ஆடவில்லை , அவர் ஆடிய பிறகுதான் அவர் PLAYER ஆஹ் இல்லை SUPPLIER ஆ என்று தெரியும் , ஒருத்தர் 9 முறை சென்னை வந்தார் என்ன ஆச்சு , அவருக்கே விபூதி அடிச்ச நாங்கள் எல்லாம் ஜுஜுபி


Mettai* Tamil
நவ 09, 2024 14:06

நீங்க சொல்ற அந்த , வேர்ல்ட் கப் வின்னர் ஆவதற்கு எவ்வளவு செலவு ஆச்சு ன்னு தெரியுமா ??


Duruvesan
நவ 09, 2024 12:35

தமிழகம் என்று கவர்னர் சொன்னாருன்ன துள்ளி குதித்த விடியல் சார் மற்றும் அமை தியாக இருப்பது ஏனோ? பீதி ஆவுது


Ganesun Iyer
நவ 09, 2024 12:28

செத்தவங்க ஓட்டு விடியலுக்கு இனி கிடைக்கிறது கஷ்டம்போல....


Dhurvesh
நவ 09, 2024 13:09

தெரியாத கடவுளை விட தெரிஞ்ச பேய் மேல் . 40/40 ரிவிட் அடி வாங்கியும் அடங்கலை


mindum vasantham
நவ 09, 2024 11:48

மாநிலத்துக்கு விஜய் மத்தியில் தேசிய கட்சி என mgr இந்திரா போர்முலா வருமா , இல்லை அதிமுகவுக்கு புது தலைமை வருமா


முக்கிய வீடியோ