உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி பெயருக்கு மாறும் டி.வி.எஸ்., டோல்கேட்

கருணாநிதி பெயருக்கு மாறும் டி.வி.எஸ்., டோல்கேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : திருச்சியில், டி.வி.எஸ்., டோல்கேட் என்ற பஸ் ஸ்டாப் பெயரை, கலைஞர் கருணாநிதி டோல்கேட் என மாற்ற, மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாதக் கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஜமால் முகமது கல்லுாரி அருகில் உள்ள டி.வி.எஸ்., டோல்கேட் என்ற பஸ் ஸ்டாப் பெயரை, கலைஞர் பஸ் ஸ்டாப் என்று பெயர் மாற்றம் செய்ய, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர் அம்பிகாபதி கூறுகையில், ''புதிதாக துவக்கப்படும் இடங்களுக்கு யார் பெயரை வேண்டுமானாலும் வைக்கட்டும்.''அதில் ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே டி.வி.எஸ்., டோல்கேட் என பல ஆண்டுகளாக இருந்த பஸ் ஸ்டாப் பெயரை மாற்றுவது சரியல்ல. இது ஜனநாயக போக்கு அல்ல. அதனால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jothibasu Nagarajan
மார் 31, 2025 13:38

வரவேற்க தகுந்த முடிவு. டிவிஎஸ் தமிழ்நாட்டிற்கு செய்ததென்ன. அங்கு அவருடைய தொழில் நிறுவனம் இருந்ததால் அந்த பெயரை குறிப்பிட்டு அந்த இடத்தை அழைத்தனர். வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த இடத்திற்கு பெயர் மாற்றம் அவசியமே. தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாட்டை முன்னேற்றிய கலைஞர் பெயர் சரியானதே.


Manikandan vijayakumar
மார் 31, 2025 06:50

கருணாநிதி டோல்கேட் பெயரைவிட "...."னு பெயர் வையுங்கள் பொருத்தமாக இருக்கும்


Karthikeyan
மார் 30, 2025 22:00

டோப்பா தலையர் என்ன வேண்டுமானாலும் செய்வாப்ல...அவா பேரனோட பெயரைக்கூட வைக்கலாம்.. திமுகவை ஆட்சியில் உட்காரவைத்ததற்கு மக்கள் தினமும் சந்திக்கும் அவலங்களில் இதுவும் ஒன்று...


B MAADHAVAN
மார் 30, 2025 13:17

தமிழகத்திற்கு கருணாநிதி என்று பெயர் வைத்தால் கூட இவர்கள் தாகம் தீராது போல் உள்ளது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க சொத்து தியாகம், உயிர் தியாகம் செய்த பலர் இருக்கும்போது, குடும்பத்திற்கு சொத்து சேர்த்து அழகு பார்த்த ஒரு கட்சியின் தலைவர் பெயர் வைப்பது பொருத்தமாக இல்லை. டாஸ்மாக் கடைக்கு வேண்டுமானால் பெயர் வைத்து அழகு பார்க்கலாம். எல்லா இடத்திற்கும் கருணாநிதி என்று அவரது பெயரையே வைத்தால், நாளை எப்படி அடையாளம் காண்பது .. மக்கள் வித்தியாசம் தெரியாமல் ரொம்ப சிரமப் படுவார்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.. தமிழகத்தின் நிலை மிக்க பரிதாபமாக உள்ளது.


metturaan
மார் 30, 2025 12:53

இதெல்லாம் ரொம்ப அநியாயம்... அதிக ஆட்டம் அவஸ்தையில் முடியும்...


Bhaskaran
மார் 30, 2025 10:32

ஒரேயடியாக இது கருணாநிதி நாடு என்று பெயர்மாற்றம் செய்துவிடலாம்


Suresh Sivakumar
மார் 30, 2025 06:11

Renaming everything on the name of thieves will definitely make the.coming generations remember their misdeeds


ஆரூர் ரங்
மார் 29, 2025 15:51

ஜெயிலின் அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. நடத்துனர் ஜெயிலுக்கு போக இங்கே இறக்குங்கள் என குரல் கொடுத்தாரு .


ராஜ்
மார் 29, 2025 14:31

டிவிஎஸ் ஐயர் ஜாதி என்பதால்


Haribabu Poornachari
மார் 29, 2025 14:15

டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி பெயரை மாற்ற தீர்மானம் போடுவீர்களா ?


முக்கிய வீடியோ