உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரண்டு நாளில் வாகனங்களுக்கு பர்மிட்: விரைவில் ஆன்லைன் வசதி அறிமுகம்

இரண்டு நாளில் வாகனங்களுக்கு பர்மிட்: விரைவில் ஆன்லைன் வசதி அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்து வாகனங்களுக்கான, 'பர்மிட்' இணையவழியில் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், மொத்தம் 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தினமும் 2,000க்கும் மேற்பட்டோர், புதிய, 'பர்மிட்' பெற விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் விண்ணப்பித்து பெற வேண்டியுள்ளது.மேலும், பர்மிட் வாங்க குறைந்தது ஏழு முதல் 10 நாட்கள் வரை ஆகின்றன. இந்த வசதியையும் ஆன்லைனில் கொண்டு வர வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன. ஆட்டோ, கால் டாக்சி, மினி வேன், பஸ் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கான பர்மிட், ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை, போக்குவரத்து ஆணையரகம் விரைவில் கொண்டு வர உள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: வாகன போக்குவரத்துக்கான ஆவணங்களை, tnsta.gov.inஎன்ற தளத்தில் பெறும் திட்டத்தை, படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம். பஸ், ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களுக்கு புதிய பர்மிட், தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் வழங்கப்படுகின்றன.வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து வழங்க தாமதம் ஏற்படுகிறது. இனி, பர்மிட்டையும் ஆன்லைனில் பெறும் வசதி ஏற்படுத்த உள்ளோம். இதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும். இந்த வசதி அமலுக்கு வரும் போது, விண்ணப்பித்த இரண்டு நாளில் பர்மிட் பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
செப் 29, 2024 21:14

இந்த ஆண்டின் ஜோக் ., பணம் இல்லாமல் மன்னிக்கவும் லஞ்சம் இல்லாமல் எதுவுமே இயங்காத இவ்வுலகில்


Kasimani Baskaran
செப் 29, 2024 06:43

அதெப்படி... சாத்தியமில்லை. சம்பாதிக்கும் ஒரே வழியையும் அடைத்து விட்டால் வாழ என்ன செய்வார்கள். அவர்கள் என்ன 350 கோடியில் வீடா கேட்டார்கள்?