உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெற்கு குஜராத், மேற்குவங்கம் அருகே 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கத்தில் குறைந்தத் தாழ்வுப் பகுதி உருவானது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் அருகே உருவான காற்ழுத்த தாழ்வு, வடக்கு- வடமேற்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும். மேற்கு வங்கம் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வட மேற்கு நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

elango sivani
ஜூன் 21, 2025 02:10

திருநெல்வேலி மாவட்டத்தில் 30சதவீதம்தான் மழை பெய்திருக்கிறது


Jegadesan K
ஜூன் 18, 2025 09:22

கோவையில் மழை இல்லை


Nada Rajan
ஜூன் 17, 2025 11:31

ஏற்கனவே மழை பெய்து வருகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை