உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொள்ளையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கரூர், டிச. 18-கரூர் மாவட்டம், மாயனுார் அருகே சேங்கல் மேல்பண்ணை களம் பகுதியில் கடந்த அக்., 25ல் கொள்ளை சம்பவம் நடந்தது. அதில், முகமுடி அணிந்து கொண்டு ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்த முத்துபாண்டி, 25, விக்னேஷ்வரன், 23, ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். இதையடுத்து முத்து பாண்டி, விக்னேஷ்வரன் ஆகியோரை, குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்ய நேற்று கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.பிறகு, திருச்சி மத்திய சிறையில் உள்ள இரண்டு பேரிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, மாயனுார் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
டிச 18, 2024 06:16

கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்கள் ஜாமினில் வெளியில் வந்து மந்திரியாக தொடர்கிறார்கள். பாவம், இவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை