இரு விமானங்கள் அவசர தரையிறக்கம்
சென்னை: சென்னையில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு, 'ஸ்பைஸ்ஜெட்' விமானம், நேற்று காலை 6:17 மணிக்கு புறப்பட்டது. இதில், 150 பேர் இருந்தனர். விமான பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காலை 6:42 மணிக்கு விமானம் பாதுகாப்பாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.இதேபோல் மற்றொரு ஸ்பைஸ்ஜெட் விமானம், டில்லியிலிருந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிற்கு நேற்று காலை புறப்பட்டது. நடுவானில் விமானத்தின் இறக்கையில் பறவை மோதி சேதம் ஏற்பட்டது.இதனால், பீஹாரின் பாட்னா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.