உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ்; தேசிய நெடுஞ்சாலையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது

டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ்; தேசிய நெடுஞ்சாலையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கோவையில் டூவீலரில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வாலிபர்கள் 3 பேர் வெளியிட்டனர். இவர்கள் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்து வீடியோ எடுத்து இருந்தனர். பொதுமக்கள் அளித்த புகார் படி, ரீல்ஸ் வெளியிட்ட திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன், தமிழ்நாதன் ஆகியோரைப் போலீசார் கைது செய்து விசாரித்தனர். 3 பேரும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த மன்னிப்பு வீடியோவில், ''சாலையில் செல்லும் போது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வீடியோ எடுக்காதீர்கள்.போலீசாருக்கும் தொந்தரவாக இருக்காதீர்கள். இது குறித்து போலீசார் அட்வைஸ் செய்த பிறகு தான் எவ்வளவு பெரிய விஷயம் என்று புரிந்தது. நாங்களும் இது மாதிரி பண்ண மாட்டோம், நீங்களும் இது மாதிரி பண்ணாதீங்க'' என தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஏப் 18, 2025 06:38

மூணு மாசம் களி மட்டுமே திங்க வெச்சு வெளியே அனுப்புங்க.


M S RAGHUNATHAN
ஏப் 17, 2025 15:50

அவர்களின் அப்பாவை பிடித்து ஜெயிலில் போட்டால் சரியாக போகும்.


Manalan
ஏப் 17, 2025 14:35

Another one great achievement OF TN Police


ديفيد رافائيل
ஏப் 17, 2025 17:55

இதே போல தெரிந்தே அதிகார திமிரில் தவறு பண்ணும் ஆளுங்கட்சி அரசியல்வாதிங்களை பிடிக்க துப்பில்லை. ஏதோ police சாதனை பண்ண மாதிரி comment பண்றீங்க.


enkeyem
ஏப் 17, 2025 14:32

எல்லோரும் படித்த இளைஞர்கள் தானே. போலீஸ் சொன்ன பிறகுதான் தெரிகிறதா? உங்களுக்கு பொது அறிவு என்பது இல்லையா? யார் என்ன செய்துவிடுவார்கள் என்கிற தெனாவெட்டு. மாட்டிக்கிட்ட பின்பு சமாளிப்பு


Keshavan.J
ஏப் 17, 2025 18:26

யாரு இவனுகளா படித்த இளைஞர்கள்.. போங்க பிரதர் காமெடி பண்ணாதீங்க


எம். ஆர்
ஏப் 17, 2025 13:51

ஜாமின் என்பது கண்துடைப்பு இவனுகளை 2 மாதம் மாற்று திறனாளிகள் தங்கியிருக்கும் ஆசிரமத்தில் விட்டு அவர்களுக்கு பணிவிடை செய்ய அனுப்ப வேண்டும் அப்போது கண்கூடாக தெரியும் கை கால்களை இழந்தால் என்னவாகும் என்று புத்தியுடன் மற்றவர்களுக்கும் உதவியாக வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் வேலையையும் 2 மாதம் செய்ய வைக்க வேண்டும்


sathya narayanan
ஏப் 17, 2025 16:03

சூப்பர் karuthu


Iniyan
ஏப் 17, 2025 13:12

மாவு கட்டு போட்டு அனுப்ப வேண்டியதுதானே


Barakat Ali
ஏப் 17, 2025 12:59

இதுங்களை என்கவுண்டரில் போட்டா தப்புங்களா ????


Ramesh Sargam
ஏப் 17, 2025 14:07

இல்லைங்க.


Ramesh Sargam
ஏப் 17, 2025 12:55

கைது. பிறகு ஜாமீனில் விடுதலை. எனக்கு இந்த ஜாமீன் என்கிற வார்த்தையே பிடிக்காது. ஆனால் நீதிபதிகளுக்கு அந்த ஜாமீன் வார்த்தை ஜாமூன் சாப்பிடுவது மாதிரி. கேட்டவுடன் கொடுத்து விடுவார்கள்.


Anantharaman Srinivasan
ஏப் 17, 2025 12:48

ஏன் இதுக்கு முன்னாடி போலீஸ் செய்த பல அறிவுரைகள் இவர்கள் கவனத்திற்கு வரவில்லையா..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை