உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பள்ளி பஸ் - பைக் மோதல் இரு தொழிலாளர்கள் பலி

 பள்ளி பஸ் - பைக் மோதல் இரு தொழிலாளர்கள் பலி

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ஞானவேல், 54. இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், 48; கூலி தொழிலாளிகளான இருவரும், மாடு வாங்க பைக்கில் நேற்று முன்தினம் டி.ரெங்கநாதபுரம் சென்றனர். பைக்கை மணிகண்டன் ஓட்டினார். ஏ.வாடிப்பட்டி ஐந்து ஏக்கர் காலனி, கருப்பசாமி கோவில் அருகே சென்றபோது, பின்னால், வத்தலகுண்டு பகுதியிலிருந்து பள்ளி மாணவியரை ஏற்றி சென்ற தனியார் பள்ளி பஸ், பைக் மீது மோதியது. இதில், ஞானவேல் பலியானார். மணிகண்டன் தேனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பஸ்சில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு இல்லை. வத்தலகுண்டை சேர்ந்த பஸ் டிரைவர் கேசவமூர்த்தி, 21, என்பவரை, ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ