உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் உலக தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

துாத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் உலக தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தூத்துக்குடி: ''தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் ரூ.30,000 கோடி செலவில் கட்டுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலமாக 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்'' என தொழித்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்தார்.அவரது அறிக்கை: தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்று ரூ.30,000 கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இரண்டு உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும், இதன் மூலம் முதல் கட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட், ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும், இது 45,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்கும்.இந்தத் துறையில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkataraman
செப் 22, 2025 21:58

மத்திய அரசின் இந்த கப்பல் கட்டும் தளங்களால் தூத்துக்குடிக்கு தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். ஆனால் மக்கள் மறுபடியும் கனிமொழிக்கும், திமுக உதவாக்கரை களுக்கும்தான் தேர்தலில் ஓட்டு போடுவார்கள்.தூத்துக்குடி அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 20, 2025 19:17

மாநில அரசு கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசின் கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி பெறவேண்டும்.....வெறுமனே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு 55000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது மக்களை ஏமாற்றவே.... மக்களுக்கு நல்லது செய்ய யோசிக்காமல் அனுதினமும் எப்படி மக்களை முட்டாளாக்கி ஏமாற்றலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறது இந்த திமுக அரசு..... நீங்கள் வேண்டும் என்றால் பாருங்களேன் மறுபடியும் இவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள்.....இது திமுக நல்லாட்சியால் அல்ல தமிழக மக்கள் மீது எனக்குள்ள உள்ள அபரிதமான நம்பிக்கையால் காரணம் அவர்கள் அதிக மகா புத்திசாலிகள்....!!!


Bala Kuppusamy
செப் 21, 2025 09:48

சரியாக சொன்னாய். உன்னை போன்றவர்கள் இருக்கும் வரை


panneer selvam
செப் 20, 2025 16:35

Have you got the permission from local Churches otherwise it will not take off like Colachel port


முக்கிய வீடியோ