உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி வழங்க பட்டியல் தயாரிப்பு

விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி வழங்க பட்டியல் தயாரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த, 100 வீரர்களுக்கு அரசு பணி வழங்க, மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்கப்படுகிறது.தமிழக அரசு மற்றும் அதன் பொதுத் துறை நிறுவனங்களில், விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நீச்சல், வாள் சண்டை, படகோட்டுதல், தடகளம், ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல வகையான விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில், பதக்கங்களை குவிக்கும் வீரர்களுக்கு, பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 100 வீரர்களுக்கு பணி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்த, மாவட்ட வாரியாக, தகுதியான விளையாட்டு வீரர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதி, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்திற்கு தகுந்தபடி, அரசு துறைகளில் விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

D.Ambujavalli
அக் 24, 2024 18:56

எத்தனை போலி சான்றிதழ்கள், கோப்பைகள், கேடயங்கள் தயாராகி இருக்கிறதோ இதற்குள்


Natchimuthu Chithiraisamy
அக் 24, 2024 17:33

கட்சி காரனுக்கு போட்டால் அவன் சாகும் வரை அவன் பேரன் சாகும் வரை ஒட்டு கிடைக்கும். இன்பநிதி மகனும் முதல்வர் ஆகட்டும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 16:38

ஏற்கனவே, சில அலுவலகங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்கிறது. அந்த அலுவல் பிடிக்காததால் சில ஸ்போர்ட்ஸ்மேன் கள் சேருவதில்லை. இனி அவங்கவங்களுக்குப் பிடித்த அலுவல்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேரலாம் என்பது பாராட்ட வேண்டிய சீர்திருத்தம்.


G Mahalingam
அக் 24, 2024 16:35

திமுக அமைச்சர்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் வந்தேறிகள். அதுவும் தெலுங்கு வந்தேறிகள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 14:52

துணை முதல்வரின் செயல்கள் அற்புதம். ஆரம்பமே அசத்தல். கடந்த மாத மழை நேரத்தில் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியதில் ஆரம்பித்த வேகம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.


Anand
அக் 24, 2024 17:54

இருநூறு ரூவாவிற்கு இந்த கூவல் சற்று குறைவுதான்.........


Balasubramanian
அக் 24, 2024 13:25

அவர்கள் கட்சி தொண்டர்களின் சொந்த பந்தங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை!


Sankare Eswar
அக் 24, 2024 13:18

திருடன்ஸ் டெக்னிக்ஸ்


Ramesh Sargam
அக் 24, 2024 12:21

விளையாட்டுப்பிள்ளையின் விளையாட்டுத்தனமாக திட்டங்கள்.


Indian-இந்தியன்
அக் 24, 2024 10:51

இந்த கராயனை யாரு மதிக்கிறார்கள்


Amsi Ramesh
அக் 24, 2024 10:44

உங்கள் மது கடைகளில் குடித்து வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கும் ஒரு சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கலாம்


sridhar
அக் 24, 2024 12:04

எப்படி போதும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 16:36

ஹலோ, தமிழ் நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கியவர் எம் ஜி ஆர். மதுக்கடைகள் திறந்ததும் அவரே தான். முதல் கடை மதுரை தல்லாகுளம் அருகில் என்று நினைக்கிறேன். மதுக்கடைகள் யாரோடதும் அல்ல, எல்லா மாநிலங்களிலும் அந்தந்த அரசாங்கத்தோடது.