உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி Vs இ.பி.எஸ்., மோதல் முற்றியது; மாறி மாறி தாறுமாறாக விமர்சனம்!

உதயநிதி Vs இ.பி.எஸ்., மோதல் முற்றியது; மாறி மாறி தாறுமாறாக விமர்சனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்? என துணை முதல்வர் உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., விமர்சனம் செய்தார். அன்று இருந்து முதல்வர் ஸ்டாலின் இ.பி.எஸ்.,யை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், துணை முதல்வர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அரசுத்திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., கேட்டிருந்தார். அதற்கான பதிலை இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர் , ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார். குறிப்பாக, மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு கருணாநிதி பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்கிறார். 94 வயது வரை தமிழக மக்களுக்காக உழைத்த கருணாநிதி, பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த காலங்களில், அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்?

நவீன தமிழகம்

கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழகத்தை உருவாக்கிய கருணாநிதி பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் கருணாநிதிக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு. 'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது. யார் காலைப் பிடித்து முதல்வர் ஆனாரோ, அவரின் காலையே வாரிவிட்ட அவர், நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார். அவர் வேண்டுமானால், தான் ஊர்ந்து போன டேபிள் - சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கருணாநிதிக்கு சிலை வைப்போம். அடுத்தது, அப்பா, மகனை பாராட்டுகிறார் ; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் வேதனைப் பட்டுள்ளார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதல்வரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. போற்றுகிறது! முதல்வர் ஸ்டாலின் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

கரப்பான் பூச்சி

'தன்னை புகழ யாருமே இல்லையே' என்ற விரக்தியும், 'தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே' என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. 'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்' என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான். சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள். எங்களைப் பார்த்தால், ஆரியத்தின் அடிவருடிகளுக்கும், அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 'எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன் - நான் கடந்து வந்த பாதை யாருக்கும் காணக் கிடைக்காது' என்று தனக்குத்தானே Experience Certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர், நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள்?

வீண் சவடால்

நீங்கள் சொன்ன அந்த 'சேக்கிழ' ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? உங்கள் கட்சிப் பெயரில் உள்ள 'திராவிடம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா? இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு எங்களை விமர்சிக்க வாருங்கள். உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது. இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

haris jayaraj
நவ 19, 2024 14:29

2022 லிருந்து இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது இவர்கள் வாக்குவாதம் செய்வது, இவர்களை தவிர வேறொருவர் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்கு தான். மூன்றாவது ஒருவர் தமிழ்நாட்டில் இல்லை எனவும் சொல்ல வருகின்றார்கள். திரு உதயநிதி அவர்களை அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதை சொல்லாமல் சொல்கின்றார் நமது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இது திமுகவிற்கும் அதிமுகவிற்கு உள்ள மறைமுக ஒப்பந்தம். நாம் தான் இங்கு முட்டாள்களாக இருக்கின்றோம்.


என்றும் இந்தியன்
நவ 18, 2024 17:06

இதோ சில உண்மைகள் சில உளறல்கள் மறை நிதியிடமிருந்து நீங்கள் சொன்ன அந்த சேக்கிழ ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.???1-சேக்கிழார் எழுதியது பெரியபுராணம், ராமாயணம் இல்லை உளறல் ஓங்கோல் தெலுங்கு மறைநிதி.2- 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த கலைஞர் அவர்களின், பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. 87 வயது வரை தான் முதல்வraaga இருந்தவர் கலைஞர் . 3-நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள்தான்.- இவ்வளவு சுத்தமாக நிஜத்தில் தான் ஒரு விஷக்காளான் என்று யாருமே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்-very good மறை நிதி உண்மையை ஒப்புக்கொண்டதற்கு


angbu ganesh
நவ 18, 2024 16:14

hallow எடுபுடி சாரி டெபுடி முதல்வர் அதெப்படி 94 வருஷம் ஒழச்சு இருக்க முடியும் அவர் அரசியலுக்கு வந்து நாடகத்துக்கு படத்துக்கு ? எல்லாம் கத வசனம் எழுதி பொழச்சு அப்புறம் அண்ணா போட்ட பிச்சைல அரசியலுக்கு வந்து எப்படியும் ஒரு 25 வயசுக்கு மேலதான் வந்திருப்பார் உங்க தாத்தா அப்புறம் 94 வருசமா தமிழ்நாட்டுக்கு ஒழச்சாருன்னு சொல்றியேப்பா உனக்கு வோட்டு போட்ட தமிழ் நாட்டு மக்கள் நடந்து போறாங்க ஆனா நீ ac கார்ல 10 securityoda ஊர்வலம் போற


Suppan
நவ 18, 2024 16:06

வெள்ளையனின் அடிவருடிகள் சொல்கிறார்கள் கேட்டுக்கொள்ளுங்கள்


Dharmavaan
நவ 18, 2024 14:30

...புத்தி வரவில்லை


Rengaraj
நவ 18, 2024 14:10

எடப்பாடிக்கு உதயநிதி பதில் ஒரு முன்னாள் முதல்வருக்கு இந்நாள் துணை முதல்வர் பதில் நாற்பது ஆண்டுகால அரசியல் தலைவருக்கு நான்கு ஆண்டுகளே அனுபவம் உள்ளவர் பதில் ஒரு பெரிய தலைவருக்கு சின்னவர் பதில் அதிமுகவின் நிலைமை ரொம்பவே நல்லா இருக்கு கட்சி எங்கேயோ போய்ட்டிருக்கு அவரவர் செய்த கர்மா தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...........


SUBRAMANIAN P
நவ 18, 2024 13:42

எவனோ எழுதி குடுத்திருக்கியான் நல்ல தெரியுது. உதைக்கு இதெல்லாம் வராது. நல்ல சண்டை போட்டு நாறுங்க. உங்களைப்போல ஆளுங்களைத்தான் தமிழக மக்கள் இன்னும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஆக மக்களைப்பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லையா என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு நீங்கள் என்று பதில் சொல்லப்போகிறீர்கள்? இது மக்களின் கேள்வி. பதில் சொன்னாதான் அடுத்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு


sankar
நவ 18, 2024 12:41

உலகமகா அறிவாளி உதயநிதி - சொன்னா கேட்டுக்கொள்ளுங்கள் சார்


ஆரூர் ரங்
நவ 18, 2024 12:13

நீதியரசர் வேல்முருகன் அவர்கள் இக்கட்சிகள் பற்றிக் கூறிய கருத்தை நிரூபிக்கிறார்கள். பங்காளிகளின் குழாயடி சண்டை.


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 18, 2024 19:25

அவர்களிடம் தான் கதவுகள் பூட்டு இல்லாமல் திறந்தே இருக்குது என்று ஒரு கோளாறு சொல்லியது பாவம்


திகழ்ஓவியன்
நவ 18, 2024 12:00

அப்படியே மோடி 15L என்று போட சொல்லு, மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தவப்புதல்வன் , இலவச BUS காலை சிற்றுண்டி இப்படி வோட்டு DMK வுக்கு வெற்றிக்கு வழி வகுக்கும் , மோடி 8 முறை வந்தும் ஓத்த சீட்டு நஹி


sridhar
நவ 18, 2024 17:11

கரெக்ட் , மக்கள் திருந்தாதவரையில் திமுக ஜெயித்துக்கொண்டே இருக்கும். பணம் வேண்டாம் , இலவசம் வேண்டாம் , நல்ல ஆட்சி தான் வேணும் என்று முடிவெடுத்துவிட்டால் திமுக அழிந்துபோகும்.


சமீபத்திய செய்தி