உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூரணத்தம்மாளுக்கு உதயநிதி வாழ்த்து

பூரணத்தம்மாளுக்கு உதயநிதி வாழ்த்து

மதுரை : மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணத்தம்மாள். வங்கி ஊழியர். இவரது மகள் ஜனனி நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு தானமாக வழங்கினார். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இவரை பாராட்டி குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்க உள்ளார். இந்நிலையில் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க மதுரை வந்த அமைச்சர் உதயநிதி, நேற்று காலை பூரணத்தம்மாள் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்