உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களம் இறங்குகிறார் உதயநிதி

களம் இறங்குகிறார் உதயநிதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு பதிலடி தரும் வகையில், நான்கு மண்டலங்களில் தி.மு.க., இளைஞரணி மாநாடு நடத்த, துணை முதல்வர் உதயநிதி திட்டமிட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., கூட்டணி இலக்கு நிர்ணயித்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் கட்சியின் வருகையால், அதில் பின்னடைவு ஏற்படாமல் தடுக்க, தி.மு.க., இளைஞரணியினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இளைஞர் அணியில், 5 லட்சம் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தையும் உதயநிதி உருவாக்கியுள்ளார். புதிதாக நியமிக்கப்படும் தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நான்கு மண்டல மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக, அக்., 12ல், கோவையில் மாநாடு நடத்தப்படுகிறது. அதன்பின், சென்னை, திருச்சி, மதுரை என, அடுத்த ஆண்டு பிப்., வரை மண்டல மாநாடுகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vijay D Ratnam
செப் 26, 2025 17:05

கருத்து பதிவிடும் வாசகர்கள் டிஸ்கரேஜ் செய்ற மாதிரி போடாதீர்கள். வரட்டும் பாஸ் வரட்டும். இவிங்களுக்குல்லாம் எவனும் ஓசில வரமாட்டான். பேமெண்ட் கொடுத்தாத்தான் வருவான். குடோன்ல, கன்டெய்னர்ல இருக்குற கோடிக்கணக்கான ரூபாய் பணம் இறங்கும்ல. சாமான்ய மக்கள் கைக்கு கொஞ்சம் காசு வரும்ல. இப்போல்லாம் முன்னூறு ரூவாய்க்கி குறைச்சலா எவனும் லாரில ஏறமாட்டான். வாழ்க கோஷம் போட ஒரு ரேட்டு, சைடுல நின்னு டாட்டா காட்ட கைகாட்ட ஒரு ரேட்டு, ஆரத்தி எடுக்க, குத்தாட்டம் போட, மேடை போட்டு ரெக்கார்ட் டான்ஸ் ஆட, தலைவா தலைவான்னு கதற என்று ஒவ்வொன்றுக்கும் பேமெண்ட் கொடுக்கணும்ஜி. பொறவு குவாட்டர், பிரியாணி என்று எவ்ளோ விஷயம் இருக்குது. இப்பலாம் கூட்டத்துக்கு போனா பிளாஸ்டிக் சேர் ஒன்று கிடைக்கும். நல்லா தொங்குற திறமை இருந்தால் வாழைத்தார், வாழைப்பூ இளநீர் கொத்துன்னு புடுங்கிகிட்டு வரலாம். அட வாழைத்தண்டாவது தேரும்ல , வரட்டும் பாஸ். பல்லிருக்குறவன் பகோடா சாப்பிட போறான். முதலமைச்சர் நாற்காலி ஒன்றுதான். அது எடப்பாடியா ஸ்டாலினா என்று பார்த்துடுவோம்.


தமிழ் மைந்தன்
செப் 26, 2025 14:16

இனி ஒரே காமெடிதான் வடிவேலு அவுட்


Mr Krish Tamilnadu
செப் 26, 2025 13:38

20 அம்ச விதிகளை பேக்ஸ் பண்ணுங்க. கை, கால் எல்லாம் ஆட்ட கூடாது. இளைஞர் அணி சிம்பல் போட்ட பனியன் போட்டு 5 பேர் தான் பின்னாடி வரணும். பிளைட்டை விட்டு இறங்குவதும் தெரிய கூடாது. கிளம்பி போனதும் தெரிய கூடாது. கூச்சல், ஆராவாரம், பேனர் எதுவும் பார்க்க கூடாது. முடிந்தளவு கிளம்பி வராம, வீட்டில் இருப்பது ரொம்ப நல்லது. விதிமுறைகளை சரியாக பின்பற்றவும்.


Ramesh Sargam
செப் 26, 2025 11:17

பார்த்து களம் இறங்கும்போது அதலபாதாளத்தில் விழுந்துவிடப்போகிறார்.


ராமகிருஷ்ணன்
செப் 26, 2025 10:05

கொம்பன் இறங்கிட்டார். நன்றாகத் ஓடிவிடுங்க.


srinivasan
செப் 26, 2025 09:10

களம் இறங்கி உடைந்த நாற்காலிகளை எண்ணவா? ஒன்றும் கிழிக்க முடியாது.


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2025 07:31

காங்கிரஸ் முதல்வர் சித்தம்கலங்கியராமையா மாதிரி மக்களை இம்சிக்காம இருந்தா சரி