உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி பிரச்னையை துாண்டும் உதயநிதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

மொழி பிரச்னையை துாண்டும் உதயநிதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'முல்லைப்பெரியாறு பிரச்னையை தீர்க்க முடியாமல், மொழிப்பிரச்னையை துாண்டிவிடும் வகையில், துணை முதல்வர் உதயநிதி கேரளாவில் பேசியுள்ளார்' என்று ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, 'ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்' என்றார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக கேரளாவும் துணைநிற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கேரளாவில், ஏற்கனவே மும்மொழித் திட்டம் அமலில் உள்ளது. அங்கு சென்று மொழிப் பிரச்னையை துாண்டும் விதமாகப் பேசிஉள்ளார். துணை முதல்வராக இருப்பவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். உதயநிதி நாலாந்தர அரசியல்வாதி போல நடந்து கொள்கிறார்.கேரளா - தமிழகம் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. தமிழகத்தின் நலன், உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை குறித்த பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. அங்கிருந்து மருத்துவக் கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். அதற்கு,கேரள அரசை கண்டிக்க மனமில்லை. முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்றபோதும் அரசியல் பேசினாரே தவிர, இரு மாநில வளர்ச்சி குறித்து பேசவில்லை.ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என்ற உதயநிதி, ஹிந்தி மொழி பயில்வோர் உரிமையை பறிப்பது ஜனநாயக விரோதம் என்பதை உணர வேண்டும்.தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி மொழிப்பாடம் உள்ளது. வசதியுள்ளோர் மட்டும் ஹிந்தி படிக்கட்டும் என எண்ணுகின்றனர். ஏழை மாணவர்கள் இதை பயிலக்கூடாது என்பதுதான் அவர்கள் எண்ணம்.ஆளும் திறனற்ற இந்த அரசு ஜாதி, மொழி, இனம் என அரைத்த மாவையே மீண்டும் அரைத்து மூன்றாண்டு கால ஆட்சியை ஓட்டிவிட்டது. தேச ஒற்றுமை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதேனும் சிந்திக்க வேண்டும். பிறமொழி கற்க மாணவர்களுக்கு வழிசெய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Svs Yaadum oore
நவ 04, 2024 14:39

உருது மொழிமேல்தான் பற்று உள்ளதாம் ...அதனால் விடியல் திராவிடனுங்க பேசாமல் வடக்க பாக்கிஸ்தான் போய் குடியேறிக்கலாம் ..


Indian
நவ 04, 2024 13:25

தமிழ் மொழி மேல் பற்று இல்லாதவன், தமிழ் நாட்டில் இருக்க தேவையில்லை, பேசாம வடக்க போய் குடியேறிக்கலாம் ..


Venkataraman
நவ 04, 2024 12:31

இந்தியை திணிக்க கூடாது என்பது வேறு, இந்தியை படிக்க விரும்புபவர்களை படிக்கவிடாமல் தடுப்பது வேறு. 1967 வரை தமிழகத்தில் எல்லா அரசுப்பள்ளிகளிலும் இந்தி ஒரு விருப்பப் பாடமாக கற்பிக்கப்பட்டது. அதை நிறுத்தியது திமுக அரசு. ஆனால் இப்போது திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்பிக்கப்படுகிறது. நாட்டின் மற்ற எல்லா மாநிலங்களிலும் அரசுப்பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கடமை, மற்றும் மக்களின் உரிமையும் ஆகும். அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை. இந்தி கூடாது என்றால் ஆங்கிலம் மட்டும் ஏன் கற்பிக்கப்படுகிறது? ஆங்கிலத்தை வற்புறுத்தி புகுத்துவதால் தமிழ் மொழி அழிந்து விடாதா?


Svs Yaadum oore
நவ 04, 2024 12:08

இந்த மொழி பிரச்னையை எத்தனை வருஷம் திருப்பி திருப்பி பேசுவது?? .....ஹிந்தி க்கு பதிலாக உருது மொழி மூன்றாவது மொழி என்று உத்தரவு போடு விட்டால் பிறகு இந்த பிரச்சனை தீர்ந்து விடும் ....தமிழ் நாட்டில் தமிழன் வரிப்பணத்தில் நடக்கும் உருது பள்ளியில் தமிழ் பாடம் தேவையில்ல என்று உத்தரவு போட்டது விடியல் அரசு ...தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி படிப்பை முடிக்கலாம் ....ஹிந்தி படித்தால் வேலை கிடைக்காது ...ஹிந்தி படித்து பானிபூரி தான் விற்க வேண்டும் ..ஆனால் உருது மொழி படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பது விடியல் திராவிட கொள்கை ....அதனால் உருது மொழி மூன்றாவது மொழி என்று உத்தரவு போட்டு விட்டால் பிறகு இந்த பிரச்சனை நிரந்தரமாக தீர்ந்து விடும்....


Indian
நவ 04, 2024 11:29

இதை இவிங்க இந்தில சொல்லியிருக்கலாம். எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்.


Mohamed Younus
நவ 04, 2024 11:20

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் மொழி பிரச்சனை, சாதி பிரச்னை, மத துவேஷம் தூண்டிவிடுபவர்களை நிரந்தரமாக தேர்தலில் போட்டி இட தடை விதித்து சட்டம் கொண்டு வர வேண்டும்


Edward,Aruppukkottai 626105
நவ 04, 2024 12:31

அப்படிப் பாத்தா உங்க ஆட்கள்ல ஒருத்தர் கூட தேர்தலில் நிக்க முடியாது பாத்து சூதானமா பேசுங்க...


Madras Madra
நவ 04, 2024 10:23

புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டால் ஹிந்தி திணிப்பு பிரச்சினை முடிந்து விடும் தாய் மொழி கல்வி கொள்கையை ஆதரிக்கும் புதிய கல்வி கொள்கை ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது இல்லை ஏதாவது ஓர் 3 வது மொழி கற்று தரப்பட வேண்டும் என்றே சொல்கிறது இதை ஏற்று கொண்டால் ஹிந்தி திணிப்பு பாட்டை திமுக பாட முடியாது இதனாலேயே புதிய கல்வி கொள்கையை ஏற்காமல் தமிழ் மொழி போராளி என்ற பிட்டை போடுது திமுக


jayvee
நவ 04, 2024 10:19

உதயநிதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழுத்தத்தில் பேசுகிறார். திமுக நபர்கள் நடத்தும் பள்ளிகளில் இரு மொழி கொள்கை அமல்படுத்த உடனே உத்தரவிட திராணி உள்ளதா ?


Sampath Kumar
நவ 04, 2024 10:09

மும்மொழி கொள்கை என்பது நீண்ட நேடிய போராட்டத்திற்கு பிறகுதான் அறிமுகம் ஆனது என்பதி காட்டுக்கு மட்டுமே ஈஸ்வரனானால் புரிய முடியாது உனக்கு வரலாறும் தெரியாது வாங்கின காசுக்கு மேல கூவாதே


Arunkumar,Ramnad
நவ 04, 2024 11:49

உனக்குதான் தமிழே வராதே எதுக்கு நீயெல்லாம் கருத்து போடுற?


பாமரன்
நவ 04, 2024 10:02

இங்கே யாரும் யாரையும் எந்த மொழியையும் படிக்காதன்னு சொல்லலையே... கல்வி இரு மொழிகளில் உள்ளது. வேணும்னா அதில் ஒரு மொழியாக ஹிந்தியில் கத்துக்கட்டும். மாநில மொழி தமிழ் மட்டுமே கட்டாயமா இருக்கனும்.. யாருன்னு நம்ம தள பகோடாஸ்க்கு கூட தெரியாத காடேஸ்வராவை நேத்து சென்னையில் நடந்த ஹிந்தி சமஸ்கிருத ஆதரவு சமூகம் நடத்திய கூட்டத்தில் போய் ஹிந்தியில் அல்லது சமஸ்கிருதத்தில் பேச சொல்லியிருக்கலாம்... அங்கே இவர் அட்டெண்டன்ஸ் போட்டாரான்னு கூட தெர்ல,..


தமிழரசன்,விழுப்புரம்
நவ 04, 2024 11:55

உனக்கு பக்கோடாவை விட்டா வேறு எதுவுமே தெரியாதா நீயெல்லாம் கருத்து போடலைன்னு யார் அழுதா? வேலை மெனக்கட்டு வந்துட்டானுக...


சமீபத்திய செய்தி