உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்க யு.ஜி.சி., அனுமதி

ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்க யு.ஜி.சி., அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வகையில், மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:தேசிய கல்வி கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகள் படிக்க வழிவகை செய்யயப்பட்டுள்ளது. அதாவது, கலை அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு இடையிலான தடையை நீக்கும் வகையிலும், பல்துறை அறிவை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேநேரம், நேரடி வகுப்பில் இரண்டு பட்டப் படிப்புகளை தொடரும் நிலையில், இரண்டு வகுப்புகளின் நேரமும் ஒன்றையொன்று சமரசம் செய்யக்கூடாது. ஒரே நேரம், ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை இணைய வழியிலும் படிக்கலாம் அல்லது இரண்டையும் நேரடியாகவும், இணைய வழியிலும் படிக்கலாம்.இந்த அறிவிப்புக்கு முன், யு.ஜி.சி., நெறிமுறைகளை பின்பற்றாமல், இரண்டு படிப்புகளை ஒரே நேரத்தில் முடித்தவர்களுக்கும், பிஎச்.டி., பயில்பவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தாது. அதேசமயம், யு.ஜி.சி., இணைப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக பயிலும் படிப்புகளுக்கு மட்டும் தான், இந்த அங்கீகாரம் வழங்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A.C.VALLIAPPAN
ஜூன் 10, 2025 09:51

keep quite.


J.Isaac
ஜூன் 10, 2025 06:35

படிச்சி படிச்சி என்ன செய்ய? பிழைப்புக்கு வழி? ஏற்கவே கிட்டத்தட்ட 42% இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக மதம், மொழி, இனம் வைத்து அறியாமையில் இருக்கும் பாமர மக்கள் மத்தியில் கசப்பு, விரோத சிந்தனைகளை உருவாக்கி பிரித்தாளும் கொள்கை கையாளப்படுகிறது


Yes your honor
ஜூன் 10, 2025 10:32

படிப்பு என்பது அறிவை கொடுப்பதற்குத்தானே ஒழிய உங்களை கையைப்பிடித்து வேலை சொல்லித்தருவதற்கில்லை. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் சிலர் இன்டர்வியூவை கிளியர் செய்து வேலை பெற்றுவிடுகிறார்கள். சிலர் அதே இன்டர்வியூவில் செலக்ட் ஆவதில்லை. அதன் காரணம் மாணவனா அல்லது கல்லூரியா? படித்தவுடன் இன்னொருவன் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்கித் தான் பிழைக்க வேண்டுமா என்ன? சுயதொழில் தொடங்கலாம், குடும்பத் தொழில் இருந்தால் தாய் தந்தையருக்கு உதவிசெய்து தொழிலை மேலும் வளர்க்கலாம், நீங்கள் நான்கு பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் படிப்பு உங்களுக்கு எந்தவிதமான சுய சிந்தனையும், சுய ஆற்றலும் பெருக்காவிட்டால் நீங்கள் சரியாக படிக்கவில்லை, சிந்திக்கவில்லை என்றுதானே பொருள். இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு மதம், இனம், மொழி என்று மாங்காய் உருட்ட வேண்டியது. இத்தாவிட்டால் உங்களுக்கு வேறு என்ன பெரிதாக தெரியும்? முதலில் நீங்கள் திருந்துங்கள், நல்லது தானாகவே நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை