உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்பெயின் தொழில்நுட்பத்தில் கீழடியில் அருங்காட்சியகம்

ஸ்பெயின் தொழில்நுட்பத்தில் கீழடியில் அருங்காட்சியகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீழடி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடந்த இடங்களை, 50 லட்சம் ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக அரசு மாற்றியது. ஆனால், கீழடி தவிர்த்து மற்ற இடங்களை பராமரிக்க முடியாமல் அப்படியே கைவிட்டு விட்டது.கீழடியில் மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல், இரண்டு, மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்கள் உட்பட தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்களான, 4.5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கி விட்டது.இந்நிலையில், தமிழக அரசு, 15 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற டெண்டர் கோரியுள்ளது. இதுவரை தமிழகத்தில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமையாத நிலையில், கீழடியில் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் திறந்த வெளி அருங்காட்சியகம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் ஸ்பெயினில் நவீன தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அருங்காட்சியகம், பண்டைய கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் உள்ளிட்டவை குறித்து நேரில் ஆய்வு செய்து வந்துள்ளனர். அதன்படி, கீழடியிலும் திறந்த வெளி அருங்காட்சியகம் நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
நவ 17, 2024 09:34

ஆக கீழடி காலத்தில் முன்னணி நாடாக இருந்த தமிழகம் தனது பழம்பெருமைகளைக் காக்கக்கூட இப்போது அன்னிய நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை?. எப்போது ஒரு திராவிடருக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு வரும்?


Svs Yaadum oore
நவ 17, 2024 09:20

தமிழனின் பழம் பெரும் நாகரீகம் எவ்வளவோ உள்ளது .... அதெல்லாம் தவிர்த்து விட்டு கீழடி கீழடி என்று இந்த விடியல் திராவிட மதம் மாற்றிகள் கீழடி பிடித்து தொங்க காரணம் என்ன?? கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம்..அதனால் தமிழனுக்கு மதம் கிடையதாம்.. ஆனால் இங்குள்ள மதம் மாற்றி மதத்தை சேர்ந்தவன் எல்லாம் தமிழனுங்க ...இதுக்குத்தான் விடியல் கீழடி பிடித்து தொங்குவது ....ஜெகஜால கஸ்பரானவன் எப்போது கீழடி சென்றானோ அப்போதே விடியல் மதம் மாற்றிகள் சாயம் வெளுத்துவிட்டது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 09:15

ஸ்பெயின் குறித்து அறிய முயன்றேன் ... அங்கே இன்னும் இரு தொழில்கள் பேமஸ் .... அதாவது திராவிட மாடலுக்கு கைவந்த தொழில்கள் ... என்ன தொடர்போ ????


அப்பாவி
நவ 17, 2024 08:49

சொந்தமா சுயமா சிந்திச்சு ஒரு புண்ணாகும் செய்யத் தெரியாது. எய்ம்ஸ்க்கு ஜப்பான். இதுக்கு ஸ்பெயின்.


Kasimani Baskaran
நவ 17, 2024 06:44

தமிழனின் சரித்திரம் சங்ககாலத்தை தொட்டது. அதற்க்கு ஆதாரமாக பல இலக்கியங்கள் உண்டு. இடங்கள் உண்டு. பூம்புகார் போன்ற பல பெருநகரங்கள் கடலுக்குள் சென்று விட்டது. அவைகளை ஆய்வு செய்யாமல் வைகை நதி ஓரம் இருக்கும் கீழடியை பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பது தமிழன் திராவிடனுக்கு பின்னோடி என்று சொல்வது போல இருக்கிறது.


ManiK
நவ 17, 2024 06:18

இதுக்கு தான் 3 வருடம் முன்னால் ஒரு வீராதிவீரர் Spainகு இன்ப சுற்றுலா போய் வந்தார்னு உருட்டவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை