உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டின் பொருளாதார நிலை வலுவடைந்தால் ஜி.எஸ்.டி., விகிதம் ஒன்றாக குறைக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார நிலை வலுவடைந்தால் ஜி.எஸ்.டி., விகிதம் ஒன்றாக குறைக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மதுரை: ''நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றால் தற்போது 2 ஆக குறைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி விகிதம் ஒன்றாக குறைக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி.,க்கு முன் ஒரு பொருளுக்கான வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். மறைமுக வரிகள் அதிகம் இருந்தன. 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்திய போது 5, 12, 18, 28 சதவீத வரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட்டன. பொருளுக்கான வரி வேறுபாட்டின் சராசரியை கணக்கிட்டு அதனடிப்படையில் மேற்கண்ட 4 விகிதங்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இப்படித்தான் பொருட்களுக்கு வரி வகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. நாடு முழுவதும் ஒரே வரி ஆனால் துவக்கத்தில் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கின்றனர். அதை எதிர்க்கிறேன். ஜி.எஸ்.டி., வரி விகித நிர்ணயத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கும் பங்குள்ளன. நாடு முழுதும் ஒரே வரி நடைமுறையை கொண்டு வரும் முயற்சியில் ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டது. கொரோனா தாக்கம் வந்ததால் நாட்டின் பொருளாதார நலன் கருதி வரி விகிதங்கள் தொடர்ந்தன. அதனடிப்படையிலான வருமானமும் உயர்ந்தன. 2018 நிதியாண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதால் வரி விகிதம் நான்கில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. 375 பொருட்களின் விலை 5, 18 சதவீதம் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களை மனதில் வைத்து வரி சீர்திருத்தம் வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவை குறிப்பிட்ட பிரிவினருக்கானது. ஆனால் ஜி.எஸ்.டி., வரி நாட்டின் ஒவ்வொரு மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. நடுத்தர மக்களை மனதில் வைத்து ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 99 சதவீத பொருட்கள் 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. 90 சதவீதம் பொருட்கள் 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. 2017ல் 65 லட்சம் வியாபாரிகள் இணைந்த நிலையில் தற்போது 1.51 கோடி வியாபாரிகள் ஜி.எஸ்.டி., யில் இணைந்துள்ளனர். எதிர்க்கட்சியினர் கூறுவது போல ஜி.எஸ்.டி., கொடூரமான வரிமுறையாக இருந்தால் அதில் சேருபவர்கள் எண்ணிக்கை எப்படி உயரும். தற்போது மேற்கொள்ளப்பட்ட வரி விகித குறைப்பால் ரூ.2 லட்சம் கோடி நாட்டின் பொருளாதாரத்திற்குள் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசுக்கு வரி செலுத்துவதில் இருந்து மக்கள் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பால் மக்களிடம் அதிக பணம் சேரும். இதனால் பொருட்களை அதிகம் வாங்குவர். ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் வரி கட்டுவர். நாட்டிற்கு வருமானம் அதிகரிக்கும். இதுவே பொருளாதார சுழற்சி. பிரதமர் மோடி அறிவுறுத்தல் எட்டு மாதங்களுக்கு முன்பே நடுத்தர மக்கள், எம்.எஸ்.எம்.இ., துறைகள் பயன்பெறும் வகையில் வரி சீர்திருத்தம் மேற்கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தினார். நாட்டின் 40 சதவீத ஏற்றுமதி, எம்.எஸ்.எம்.இ., மூலம் நடக்கிறது. அக்ரோ, உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் நாட்டிலேயே 2ம் இடத்தில் உள்ளது. 8 புவிசார் குறியீடுகள் இங்குள்ள உணவுப்பொருட்களுக்கு கிடைத்துள்ளன. நாட்டின் வளர்ச்சி, வரி மூலம் பெறப்படும் நிதி சார்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி வருமானத்தால் நாட்டின் கட்டமைப்பு உயர்ந்து உள்ளது. 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர். 350 ஆக இருந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 1.5 லட்சமாக அதிகரித்துள்ளன. பொருளாதார நிலை மேலும் வலுப்பெறும் போது 2 ஆக குறைக்கப்பட்டுள்ள வரி விகிதம் ஒன்றாக குறைக்கப்படும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். முன்னதாக சங்கத்தலைவர் வேல் சங்கர் வரவேற்றார். கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், சக்தி மசாலா இயக்குநர்கள் சாந்தி, துரைசாமி, இதயம் நிறுவன இயக்குனர் முத்து, உணவு விஞ்ஞானி பசுபதி, வணிக வரி ஆலோசகர் தியாகராஜன், அணில் சேமியா நிறுவன இயக்குநர் சுகுமார், நடராஜ் ஆயில் மில்ஸ் இயக்குநர் செந்தில்நாதன், பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Vasan
செப் 20, 2025 19:44

Single slab GST of 1% for all items. Good vision. Can India achieve this by year 2035, that is 10 years from now? Continue your good work Madam


கத்தரிக்காய் வியாபாரி
செப் 20, 2025 17:23

காங்கிராசல் முக்குனாலும் வரியை மட்டும் குறைக்கவே முடியாது


Abdul Rahim
செப் 20, 2025 12:28

பொருளாதரம் இன்னமும் வலுவின்றி மந்தநிலையில் இருப்பதை ஒத்துக்கொள்கிறார்...


ஆரூர் ரங்
செப் 20, 2025 18:46

ஆமாம். ஹவாலா கடத்தல் வெடிகுண்டு இனத்தின் பொருளாதாரமே வலுவிழந்துள்ளது.


Barakat Ali
செப் 20, 2025 11:36

பொறுப்பற்ற முறையில், திறமையற்று ஆட்சி செய்து, ஊழலில் திளைத்து சுரண்டிக்கொழுத்த காங்கிரசுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தது அக்கால வாக்காளர்களின் தவறு ......


Abdul Rahim
செப் 20, 2025 12:30

13 வருஷமா தாண் காங்கிரசின் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள் ....


Venugopal S
செப் 20, 2025 09:09

பொருளாதாரம் வளர்ந்தால் வரி குறைப்போம் என்பதை விட வரியைக் குறைத்து பொருளாதாரத்தை உயர்த்த முயற்சி செய்து பார்க்கலாமே!


SANKAR
செப் 20, 2025 11:41

Excellent comment Venu.Congrsts.There is such a strong theory in Economics.


jss
செப் 20, 2025 13:43

it is a catch 22 situation. if you do not know what anybody can do.?


Mario
செப் 20, 2025 09:08

அப்போ இந்த 10 வருடம் நாட்டின் பொருளாதார நிலை வலுவடையவில்லையா:


krishna
செப் 20, 2025 08:50

2g bsnl apdiye urukku. only private companies can get the new technology.. petrol should come under gst. Recover properties od ed /it case wealths. then we accept.


KOVAIKARAN
செப் 20, 2025 08:26

மத்திய நிதி அமைச்சர் கூறியதெல்லாம், விரைவில் ஈடேறும் என்றும், அதனால் நமது நாட்டின் பொருளாதாரம் உலகில் இரண்டாம் நிலைக்கு உயரும் என்றும், நமது மக்களின் பொருளாதார நிலைமையும் உயரும் என்றும் எண்ணி, வணங்கி வரவேற்போம், நம்புவோம்.


SULLAN
செப் 20, 2025 14:25

வேற வழியில்லை. தவறுகளை காண விழியில்லை.


அப்பாவி
செப் 20, 2025 08:19

இப்போ கைநிறைய பணம்.பொறளப் போகுது. அடுத்த வருஷம் லாரி நிறைய பணம் புரளப் போகுது. அதான் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி குறைசிட்டாங்க.


Vasan
செப் 20, 2025 07:57

திரு மோடி ஜி அவர்களால் தான் நம் நாடு இன்று 2ஜி யில் இருந்து 5ஜி க்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது இரண்டரை மடங்கு, அதுவும் 10 ஆண்டுகளில். இதற்க்கு முன்னதாக 2ஜி அடைவதற்கு 67 ஆண்டுகள் ஆனது 1947-2014


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 09:28

.. ஹா, ஹா..


SULLAN
செப் 20, 2025 14:26

ஒரு வடை பார்சல்??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை