உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு நிதி ரூ.36.6 கோடியை பயன்படுத்தாத நகர்ப்புற உள்ளாட்சிகள்

அரசு நிதி ரூ.36.6 கோடியை பயன்படுத்தாத நகர்ப்புற உள்ளாட்சிகள்

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டு பணிகளுக்காக, நிதி மானியத்தில் இருந்து, 2024ம் ஆண்டில், 188.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் விருகம்பாக்கம் - அரும்பாக்கம் இடையேயான கால்வாய்க்கு குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு, 4.81 கோடி ரூபாய் நிதி விடுக்கப்பட்ட நிலையில், அதை பயன்படுத்தாமல் அப்பாலப் பணி கைவிடப்பட்டது. அதேபோல, கோவை மாநகராட்சியில், மேட்டுப்பாளையம் தெருவில் இருந்து சத்தி சாலை வரை உள்ள சங்கனுார் பள்ளம் மேம்பாட்டு பணிக்கு, 89.35 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, 28.66 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது; 21.3 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. தேனி, அல்லிநகரம் நகராட்சியில் உள்ள கர்னல் ஜான் பென்னி குயிக் பஸ் நிலையத்தில், புறநகர் பஸ் நிலைய மாற்றுப்பாதைக்கு, 1.88 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, 1.26 கோடி பயன்படுத்தப்பட்டது; 62 லட்சம் ரூபாய் பணிகள் கைவிடப்பட்டன. உடுமலைப்பேட்டை நகராட்சி மேம்பாட்டு பணிக்கு, 48.87 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதில், 8.89 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல், போடிநாயக்கனுார் நகராட்சி நுாற்றாண்டு விழா மேம்பாட்டு பணிக்கு, 50 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதில், 98 லட்சம் ரூபாய் பயன்படுத்தப் படவில்லை. அதன்படி, 188.22 கோடி ரூபாய் மானியத்தில், 36.6 கோடி ரூபாய் பயன்படுத்தாமல், அரசுக்கு செலுத்த வேண்டி இருப்பதாக, இந்திய தணிக்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை