உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்தது அமெரிக்க போர் கப்பல்கள்

 ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்தது அமெரிக்க போர் கப்பல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், 6,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்; 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியாக போராடி வரும் ஈரான் மக்களை, அந்நாட்டு அரசு துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கை வாயிலாக கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து பேசிய, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'அமைதியாக போராடி வருபவர்களை கொன்றாலும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலும், அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது' என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் என்ற பிரமாண்ட அணுசக்தி விமானம் தாங்கி போர்க் கப்பல் மற்றும் ஏவுகணைகளை தாங்கி செல்லும் நவீன போர்க் கப்பல்களை ஈரானை நோக்கி செல்ல உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதியை வந்தடைந்துள்ளன. இக்கப்பல்களில் ஈரானை துல்லியமாக தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த போர் மிரட்டலுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு சிறிய தாக்குதலும் முழுமையான போராக கருதப்படும் என, ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் தங்களின் இலக்குகளாக மாறும் என கூறியுள்ளது. போர் அச்சம் காரணமாக, பல சர்வதேச விமான நிறுவனங்கள் மேற்காசிய நாடுகளுக்கான தங்களின் சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajendra Kumar
ஜன 28, 2026 14:18

உண்மை. இளிச்சவாய் இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Shankar
ஜன 28, 2026 12:35

செத்து சுண்ணாம்பாய், செம்புத்தூக்கி வாழும் உணர்வுகள் எல்லாம், நிஜங்கள் நிறைந்த உங்கள் வார்த்தைகளால் துளிர்க்கட்டும். மற்ற மதங்களையும், மக்களையும் "காபிர்" என்று அழித்து ஒழிக்கும் இவர்களுக்கு உள்ளாகவே விருட்சமாக உள்ள இரு பிரிவான எரிமலை விரோதம் காலச்சக்கரமாக மாறும். ஜெய் ஹிந்த்.


Amar Akbar Antony
ஜன 28, 2026 11:32

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இராக்குக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து அந்த இஸ்லாமிய நாடுகளுக்கிடையே ஒற்றுமையை குழைத்து போரிட்டு இராக்கின் அதிபர் சதாம் உசைனை கொன்ற இதே அமெரிக்க இன்று அதே ஈரானை துவம்சம் செய்ய துடிக்கிறது. இதே நிலை அமெரிக்காவை நம்பும் அணைத்து நாடுகளுக்கும் தரும்.


தியாகு
ஜன 28, 2026 11:22

இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பெர்சியாவின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக் கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். தொழிலதிபர்கள் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம் , ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும் கர்மா மிக வலிமையானது. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினையின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.


மணியன்
ஜன 28, 2026 08:04

ஒரு விமானந்தாங்கி கப்பலை மூழ்கடித்தால் இந்த கொலைகாரனின் கொட்டம் அடங்கும்.


தியாகு
ஜன 28, 2026 11:28

ஈரானை இப்போது அடிக்கவில்லையென்றால் பின்னாளில் அந்த மூர்க்க கூட்டம் மத வெறிகொண்டு மொத்த உலகையும் அழித்துவிடும், பரவாயில்லையா?


MUTHU
ஜன 28, 2026 13:43

ஈரான் இரக்கம் காட்ட தகுதியற்றவர்கள் என்று தான் நினைக்கிறேன். ஒருவகையில் அவர்களால் தான் isis பயங்கரவாத கொடூரம் கட்டுக்குள் இருந்தது. ஆனாலும் பிற நாட்டில் குறிப்பாய் சவூதி ஏமன் போன்ற நாடுகளில் இவர்களால் தான் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது.


RAJ
ஜன 28, 2026 05:41

பெரியண்ணாவுக்கு இதுயெல்லாம் ஒரு டயம்பாஸ்...


முக்கிய வீடியோ