உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளான பிப்.,19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதையர். இவர் 1855ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின், சூரியமூலையில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவர் 17 வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். சென்னை மாநில கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர், புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும். இந்த உழைப்புக்காகத் தான் அவர், தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.உ.வே.சா., மீனாட்சி தமிழ்க் கல்லூரியில், 1924 முதல் 1927 வரை, முதல்வராக இருந்தார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். 'உ.வே.சா., பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதியை, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளான பிப்.,19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

theruvasagan
டிச 10, 2024 22:26

உ.வே.சாவின் அருமை பெருமைகளை யாரோ ஒருத்தர் சொல்லி புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழைப் போற்றுபவர்களா. மொழியைக் காப்பாற்ற வந்தவர்களா.


venugopal s
டிச 10, 2024 21:30

இத்தனை நாட்கள் தமிழக அரசு தமிழ்த் தாத்தாவை மதிக்கவில்லை என்று தை தை என்று குதித்தவர்கள் இப்போது இது வெறும் வாய்ப்பேச்சு என்று சொல்லி சமாளிக்க வேண்டியது தான், வேறு வழி?


Suppan
டிச 10, 2024 20:47

அடுத்து சாமிநாத அய்யர் படத்தில் அவரின் நெற்றியில் உள்ள விபூதிப்பூச்சை அழிக்க வேண்டியது தான் .


RAMAKRISHNAN NATESAN
டிச 10, 2024 20:38

இவருடைய வாழ்க்கை வரலாற்றை நான் படித்துள்ளேன் .... ஆரியர்கள் தமிழ்நூல்களை ஒழிக்க முயன்றனர் ........ ஆரியர்கள் தமிழை அழிக்க முயன்றனர் ..... இவையனைத்தும் தமிழகத்தின் வந்தேறிகள், தமிழனை மூளைச்சலவை செய்தவர்கள் சேர்ந்து இட்டுக்கட்டிய கதை என்பது புரிந்தது .....


R Devarajan
டிச 10, 2024 18:03

ஐயர் அவர்களுக்கு சென்னை ப்ரெசிடெண்சி காலேஜ் வளாகத்தில் சிலை வைத்து கௌரவிக்கப்பட்டது - திராவிட தமிழ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரும்முன்னால் - நல்ல வேளை ஐயர் நினைவு நாள் என்று வைக்கலாமே ?


Barakat Ali
டிச 10, 2024 16:38

அய்யருக்கு புகழஞ்சலி .... தமிழுக்காக மெய்யாலுமே பாடுபட்டவங்களைப் பத்தி தமிழனுக்குத் தெரியாது ..... இதுதானுங்க இன்றைய நிலை ....


சாண்டில்யன்
டிச 10, 2024 17:29

கம்பன் அழ கருணாநிதி வரை இந்து முஸ்லீம் கிறிஸ்த்துவர்கள் என மதம் இனம் கடந்து பல்லாயிரம்பேர் தமிழுக்காக பாடு பட்டிருக்கிறார்கள் தமிழர்கள் கம்பன் கழகம் பல ஊர்களிலும் ஏன் தில்லியிலும் நல்ல செயல்பாட்டில் உள்ளது என்பது பரக்கத் அலி எனும் புனை பெயரிலுள்ளவருக்கு தெரியாது என்று காண்கிறது சமீப காலமாகத்தான் திருவள்ளுவருக்கும் கார்டுவெல்லுக்கும் பெரும் தலைவர்களுக்கும் சாதி சாயம் பூசி பூசிக்கும் கேவலமான நிலை வள்ளுவனுக்கு காவித் துண்டு போட்டு காட்டவே ஒரு சினிமாவே தயாரிக்கிறாரகள் இத்தனை காலங்கடந்து திடீரென இன்று இவரை போற்றுவதும் சாதி சமாதான அரசியல் என்பார்கள்களா?


vadivelu
டிச 10, 2024 18:44

தமிழன் யார்?


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:31

சாண்டில்யன் .... இங்கே பரக்கத் மத, இன, இட ரீதியாகவே யார் பாடுபட்டார்கள், யார் பாடுபடவில்லை என்று வெளிப்படையாக யாரையும் குறிப்பிட்டு கருத்து எழுதவில்லையே ... உங்களுக்கு ஏன் எரியுது ?? உங்க பேரு ஒரிஜினலா ? பதறாதீங்க .... உளறலை நிறுத்துங்க ....


GoK
டிச 10, 2024 15:29

தமிழை காட்டுமிராண்டிகள் மொழி என்ற தாடிக்காரனுக்கு மரியாதை கொடுத்த முட்டாள்கள் கும்பல் அல்லவா இது


Sampath Kumar
டிச 10, 2024 15:18

தமிழ் தாத்தா அவரின் யாரும் தமிழ் தொண்டை அனைவரும் அறிவர் அவருக்கு உரிய கெரவதையும் மரியாதையும் இந்த அரசு அளித்தமைக்கு நன்றி இப்படி பட்ட நல்ல விஷ்யங்கள்கை இந்த அரசு செய்துட்டு ர்வது பாராட்டுக்கு உரியது சில சாங்கி சொங்கிகள் உடனே து மாற்று கருத்தை சொல்லி திசை திருப்பும் பன்னியை தொண்டர்ந்து செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்ன யா பிறவிக்குணம் போகாது நாய் வாலி நிமிர்த்த முடியாது


Ms Mahadevan Mahadevan
டிச 10, 2024 14:51

உ வே சாமிநாத ஐயர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட படும் என்று அறிவிக்க. தைரியம் அற்ற ஸ்டாலின் வாழ்க


SUBBU,
டிச 10, 2024 14:13

உண்மையில் தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர் போற்றுதலுக்கு உரியவர். அவர் இப்படி கஷ்டப்பட்டு அலைந்து பாடுபட்டு பழைய ஓலைச்சுவடிகளை சேகரித்து அதை எல்லாம் படியெடுத்து அச்சில் ஏற்றி இன்று நாம் அவற்றை அறிந்து கொள்வதற்கு காரணமாக இருந்தவர். உ.வே.சா தமிழில் புலமை பெற்றதனால்தான் பண்டைய ஓலைச் சுவடிகளில் உள்ள நமக்கு புரியாத கிரந்த எழுத்துக்களை ஆராய்ந்து படித்து அதையெல்லாம் இப்போது நாம் படிக்கும் வகையில் மொழி பெயர்த்து நமக்கு தர முடிந்தது. அவரைப் போல்தான் பண்டைய யூத நூல்களைப் புரிந்து கொள்ள நீங்கள் ஹீப்ரு மொழியில் நிபுணராக இருக்க வேண்டும். அவரைப் போலவே பண்டைய கிறிஸ்தவ மற்றும் அரபு நூல்களைப் புரிந்து கொள்ள நீங்கள் அராமிக் மொழியில் நிபுணராக இருக்க வேண்டும். ஆனால் பண்டைய இந்து நூல்களைப் புரிந்து கொள்ள நீங்கள் சமஸ்கிருதம் தெரியாத ஒரு மிஷினரி பயிற்சி பெற்றவராகவோ அல்லது மார்க்சியவாதியாகவோ இருந்தால் போதுமானது.


முக்கிய வீடியோ