உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஸ்ரோ புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்

இஸ்ரோ புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனரக பணியற்றியுள்ளார். வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3 , கிரயோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டஙகளுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bahurudeen Ali Ahamed
ஜன 08, 2025 10:02

பணி சிறக்க வாழ்த்துக்கள் திரு நாராயணன் அவர்களே


Yes your honor
ஜன 08, 2025 09:50

திரு. சோம்நாத் அவர்கள் தனது காலத்தில் பல சாதனைகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளார். இவரைப்போன்ற சயின்டிஸ்டுகளுக்கு ரிட்டையர்மெண்ட் என்பது இருக்கக்கூடாது. பணிஓய்வு பெரும் திரு. சோம்நாத் அவர்களுக்கு "ஹாப்பி ரிட்டைர்மென்ட் சார்"


Subramanian
ஜன 08, 2025 07:49

வாழ்த்துகள்


Karthikeyan Palanisamy
ஜன 08, 2025 06:51

திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:29

சிறப்பு - ஸ்ரீ நாராயணனுக்கு வாழ்த்துகள்... எனது தோழர்களுக்கு இயக்குனர் பதவி வரைதான் முன்னேற முடிந்தது... விரைவில் ஓய்வு பெற இருக்கிறார்கள்.


kantharvan
ஜன 08, 2025 11:13

குடும்பிகளின் கைப்பிடி நழுவுகிறது ??


நிக்கோல்தாம்சன்
ஜன 08, 2025 04:58

வாழ்த்துக்கள் அய்யா


sivu, chennai
ஜன 08, 2025 04:42

வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்


புதிய வீடியோ