உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16 பெட்டி ரயிலாக மாறுது நெல்லை வந்தே பாரத்

16 பெட்டி ரயிலாக மாறுது நெல்லை வந்தே பாரத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, 'வந்தே பாரத்' ரயிலில், பயணியர் முன்பதிவு, 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பதால், 16 பெட்டிகள் உடைய ரயிலாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இந்த ரயிலில் ஏழு, 'ஏசி சேர் கார்' பெட்டிகள், ஒரு, 'எக்ஸிகியூட்டிவ்' பெட்டி என, மொத்தம் எட்டு பெட்டிகளில், 596 இடங்கள் உள்ளன. அதனால், முன்பதிவு செய்யும் பெரும்பாலான பயணியருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே இதை, 16 பெட்டிகள் உடைய வந்தே பாரத் ரயிலாக இயக்க வேண்டும் என, சென்னை ரயில்வே கோட்ட வணிக பிரிவு, தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், வழக்கமான நாட்களிலும் முன்பதிவு அதிகமாகவே இருக்கிறது. தற்போதுள்ள எட்டு பெட்டிகள் போதுமானதாக இல்லை. எனவே, 16 பெட்டி ரயிலாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல் கிடைத்தவுடன், 16 பெட்டிகள் இணைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 13, 2024 09:30

வந்தே பாரத் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் ஏன்? சாதாரண கட்டணங்களை கொண்ட ரயில்களை ஏன் போதுமான அளவில் இயக்கவில்லை? குறிப்பாக செங்கோட்டை பாதையில் கூடுதல் ரயில்களை இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடக்கவில்லை. இதனால், ஆம்னி பஸ் கொள்ளையர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மோடிஜிக்கு ஏழை எளிய மக்களின் மீது கரிசனம் இல்லையோ?


ஆரூர் ரங்
நவ 13, 2024 11:32

ஆனா முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க 2000 கொடுக்க தயக்கமில்லை


visu
நவ 13, 2024 11:40

சில வசதிகளுக்கு கட்டணத்தை உயர்த்தி கொள்வது சரிதான் சென்னையில் மின்சார ரயில் கட்டணம் 5 ரூபாய ஆரம்பம் இது மிக குறைவு ஆனால் நல்ல சேவை அதே தூரத்திற்கு மெட்ரோ ரயில் 30 முதல் 40 வரை வாங்குகிறார்கள் ஏற்று கொள்ள வில்லையா .ஆனலும் வந்த பாராட் கட்டணம் மிக அதிகம் சற்று குறைக்கலாம்


Sivagiri
நவ 13, 2024 09:09

கரெக்டு, அவசர-குடுக்கைகள், இதில அனுப்புங்க, மற்ற படுக்கை வசதி ரயில்களில் ஜனங்களுக்கு கொஞ்சம் கூடுதல் இடம் கிடைக்கும் . . .


மோகனசுந்தரம் சென்னை
நவ 13, 2024 06:31

அருமை இதனால் சாமானிய மக்களும் பயனடைவார்கள். விதண்டாவாதம் செய்யும் பல நபர்களால் வந்தே பாரத் ரயிலை பற்றி என்ன கூறினாலும் அது ஒரு அற்புதமான ரயில். இதை கண்டுபிடித்து தோற்றுவித்தவர் வாழ்க வளமுடன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை