உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரமக்குடியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

பரமக்குடியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ராமநாதபரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு டி.நமுனா பட்டா வழங்கப்பட்டுள்ளது. தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி குரூப் வி.ஏ.ஓ செல்வகுமாரை 44, கடந்த 8 நாள்களுக்கு முன்பு அவர் சந்தித்துள்ளார். அப்போது டி.நமுனா பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என வி.ஏ.ஓ., கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து இரவு ரசாயனம் தடவிய பணத்தை வி.ஏ.ஓ.செல்வகுமாரிடம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

gmanikandan maths
அக் 08, 2025 10:10

லஞ்ச ஒழிப்புத் துறையில் லஞ்சம் வாங்கும் அலுவலர்களை ஒழித்தாலே லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் எந்த துறையிலும் பணிபுரிய மாட்டார்கள்


Sathya Gold
அக் 07, 2025 17:46

பகிரங்கமாக தெரிகிறது, வருவாய் துறை லஞ்ச பின்னணியிலேயே நகர்கிறது.. மக்களுக்காக இதை ஏன் அரசு சிறப்பு கவனம் எடுத்து ஒழுங்கு படுத்தக்கூடாது என்பதே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதங்கம்


Ram pollachi
அக் 07, 2025 16:08

குட்டி கலெக்டரை குறிவைத்து பிடிப்பதன் மர்மம் தான் என்ன?


KANNAN Karmegam
அக் 07, 2025 12:32

லஞ்சம் வாங்கிய கையை வெட்டி விடவேண்டும்


David DS
அக் 07, 2025 08:02

தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் சீனிவாசன், பரமசிவம் என்று இரண்டு சொந்த அன்னன் தம்பிகள் வி.ஏ.ஓ. ஆக இருக்கிறார்கள். பரமசிவம் எப்போதும் போதையில் தான் இருப்பார். ரெண்டு பெரும் வாங்கும் லஞ்சத்திற்கு அளவே இல்லை.


Gajageswari
அக் 07, 2025 05:31

Buy/borrow/beg/steal என்பார்கள் இது எந்த வகையும் சேராது. இதனால் மரண தண்டனை ஒன்றே வழி. இந்த நாட்டில் திருந்தி விடுவார் என்று தண்டனை வழங்கப்படுகிறது. சட்டத்தை மாற்றி யாரும் இதே குற்றத்தை செய்ய முற்பட கூடாது என்ற அளவில் தண்டனை தேவை


Kasimani Baskaran
அக் 07, 2025 04:13

5000 க்கு சிறை. பாட்டிலுக்கு பாத்து ரூபாய் வாங்கி பணக்காரனாக பக்கிக்கு மந்திரி பதவி கொடுக்கலாமா இல்லையா என்று வழக்கை உச்சப்பஞ்சாயத்துக்கு மாற்றி லீலை புரிய திட்டம்... வெளங்குமடீ...


Mani . V
அக் 07, 2025 03:55

நம்ம ஐந்து கட்சி அமாவாசை மாதிரி லட்சம், கோடிகளில் வாங்கினால் ஹோம் மினிஸ்டராக இல்லாமல் சாதாரண எம்.எல்.ஏ வாக இருந்தால் கூட பிரஸ் மீட் நடத்த முடியும். கொள்ளையோ, ஊழலாலோ, லஞ்சமோ லட்சம், கோடிகளில் இருக்க வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் இது போன்ற கருங்காலிகளை பதவி நீக்கம் செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.


Kudandhaiyaar
அக் 07, 2025 00:36

ஒரு சிலர் தான் தொகையை எண்ணி பார்க்கின்றனர் மற்றவர்கள் தற்போது விவரமாக வெளியிலே வாங்கிக்கொள்கின்றனர். பையில் போட சொல்லி விட்டு வுடன் தப்பித்து விடுகின்றனர். எனக்கு தெரிந்தவர் ஒருவர் கூட சென்ற போது வாங்கி பையில் போடா சொல்லிவிட்டு அப்புறம் வாருங்கள் என்று சொல்லி ஓடி விட்டார்.


தாமரை மலர்கிறது
அக் 06, 2025 22:55

கோட்டா போட்ட பட்டா ஐந்தாயிரம் ரூபாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை